2023 புத்தாண்டில் சனிபகவானால் விபரீத ராஜயோகம் பெறப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள்..சும்மா அள்ளுங்க
சென்னை: சனிபகவான் நீதிமான் என்பதால் நல்லவர்களுக்கு அவர் சோதனைதான் கொடுப்பார். தவறு செய்பவர்களுக்கு தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜனவரி 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும் அதன் மூலம் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார். கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்யும் காலத்தில் கோச்சார ரீதியாக 6,8,12ஆம் இடங்களில் வருபவர்களுக்கு விபரீத ராஜயோகமாகும். தனது வீட்டில் ஆட்சி பெற்ற கிரகம் யோகத்தை தரும்.
சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தையும் லாபத்தையும் பொருளாதார ரீதியாக நன்மைகளையும் அடையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் லாப ஸ்தானத்தில் சனி பயணம் செய்வதால் பொருளாதார ரீதியான நன்மைகளை கிடைக்கக் செய்யும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகிறது. 2023ஆம் ஆண்டு உங்களுக்கான ஆண்டாக அமையப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கடகம்
சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார். இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அஷ்டம சனியால் கஷ்டங்கள் வர வாய்ப்பு இல்லை. காரணம் எட்டாம் வீட்டு அதிபதி சனி பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். 2023ஆம் ஆண்டில் திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். நிறைய பண வரவு வரும். பொருளாதார நிலையில் உயர்வை தரப்போகிறது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கப்போகிறது என்பதால் கவலையை விட்டுத்தள்ளுங்கள்.

தனசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த ஏழரை ஆண்டு காலமாக உங்களை பிடித்திருந்த சனி உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறது. எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. தொழில், வியாபாரத்தில் இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். துணிந்து வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள் இரட்டிப்பு லாபத்தை அள்ளப்போகிறீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். 12ஆம் வீட்டு அதிபதி சனிபகவான் ராசிக்கு 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக காலமாகும். உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் பல வழிகளில் இருந்தும் பண வரும். பங்குச்சந்தை முதலீடுகள் மூலமும், லாட்டரி மூலமும் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் வரிசைகட்டி நிற்கும் அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications