மேஷத்துக்கு ஏழரை சனியிலும் திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செவ்வாய்... பணம், சொந்த வீடு, நிலம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

Sevvai peyarchi Mesham lucky zodiac signs

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.

அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியாதிபதி செவ்வாய் பகவான் ஜூன் மாதம் 7 ஆம் தேதி ராசிக்கு 5 ஆம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். அங்கு ஜூலை 28 ஆம் தேதி வரைக்கும் உங்கள் ராசியில் 5 ஆம் இடத்தில் இருந்து பலனைக் கொடுக்கப் போகிறார். மேஷ ராசி என்றாலே செவ்வாய்தான் அதிபதியே. அதனால் தான் உங்கள் வாழ்க்கையில் ஒரு வேகம் இருந்து கொண்டே இருக்கும்.

எல்லா வேலையிலும் முக்கியத்துவம், முதன்மை பெறும் ராசியினராக இருப்பீர்கள். நீச்சத்தில் இருந்து தற்போது பலமாக இருக்கிற 5 ஆம் இடத்துக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிறார். வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்தவர்கள் நீங்கள். இன்னும் ஏதாவது தன்னால் செய்ய முடியுமா என்று சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

புதிய வேலை

தற்போது 5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது மிகப்பெரிய பலம். 5 ஆம் இடம் என்பது நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை சொல்லக்கூடிய இடம். நீங்கள் செய்த நல்லது, கெட்டதற்கு தகுந்தாற்போல செவ்வாய் பகவான் பலவித நன்மைகளை தரப் போகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்ததில் இருந்து வேலையில் கடுமையான பாதிப்புகள், இழப்புகள் ஏற்பட்டிருக்கும். கடந்த ஆறு மாதம், ஓராண்டு காலமாக நிறைய பேருக்கு வேலையை இழக்கும் சூழல் இருந்திருக்கும். இனி உங்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

பட்டங்கள், பதவிகள்

வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக நிறைய மேஷ ராசிக்காரர்களுக்கு பட்டங்கள், பதவிகள் கிடைப்பதற்கான அற்புதமான தருணமாக இருக்கும். செவ்வாயின் முக்கியமான பார்வை கிடைப்பதால் 4, 7, 8 ஆம் பார்வை உள்ளது. 4 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டையும், 7 ஆம் பார்வையாக 11 ஆம் வீட்டை பார்க்கிறார். 8 ஆம் பார்வையாக 12 ஆம் வீட்டை பார்க்கிறார்.

வெளிநாடு யோகம்

இந்த 11 ஆம் இடம் என்பது அனைத்து விதமான வெற்றிகளையும் குறிக்கக்கூடிய இடம். இதனால், வரக்கூடிய நாட்களில் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். நிறைய பேர் வெளிநாடு செல்ல, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். 12 ஆம் வீட்டை செவ்வாய் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். உறுதியாக சிறப்பாக வாழும் அமைப்பு உண்டு.

லாபம்

தொழில் செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு 5 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் 11, 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மிகப்பெரிய லாபம் அடைவதற்கான வாய்ப்புள்ளது. பணம் வர வேண்டியது, பொருள் விற்பனை செய்ய நினைப்பது, ஏதாவதொரு புரொஜக்ட் செய்ய முயற்சிப்பவர்களுக்கு உறுதியாக பணம் வரும். அதன் மூலமாக தொழிலில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. வரக்கூடிய பணத்திற்கு தகுந்தாற்போல செலவும் ஆகும்.

திடீர் அதிர்ஷ்டம்

வரும் பணத்தை முதலீடு செய்வது அற்புதமான பலனைக் கொடுக்கும். 8 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம் உண்டாகும். பணத்தைக் கொடுத்து காத்திருப்பவர்களுக்கு பணம் வந்து சேரும். 40 முதல் 60 வயதினருக்கு வர வேண்டிய பணம் அனைத்தும் கண்டிப்பாக வந்து சேரும். வங்கிக் கடன், தனிநபர் கடன், இருசக்கர வாகனங்களுக்கான கடன், கார் கடன் அவை எல்லாம் கட்டாயமாக கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும்.

சொத்துகள் குவியும்

சொத்து வாங்குவதற்கான முக்கிய காரணவர் செவ்வாய் என்பதால் கண்டிப்பாக வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்களை அனுபவிப்பீர்கள். மொத்தத்தில் அற்புதமான பெயர்ச்சியாக இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+