உச்சம் பெற்ற புதனுடன் கூட்டணி சேரும் சுக்கிரன்.. நீச பங்க ராஜயோகம் யாருக்கு கிடைக்கும்?
மதுரை: சிம்மராசியில் இருந்த சுக்கிரன் உச்சம் பெற்ற புதனுடன் கன்னி ராசியில் இணையப்போகிறார். செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 8.51 மணியளவில் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். ஏற்கனவே கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். சூரியன், புதன், சுக்கிரன் கூட்டணி ஏற்படுகிறது. இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் சிலருக்கு நீசபங்க ராஜயோகம் கிடைக்கப்போகிறது. இந்த ராஜயோகத்தினால் யாருடைய காட்டில் அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது என்று பார்க்கலாம்.
சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார்.
ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாதம் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பானது. நீச பங்க ராஜயோகம் அடையும் சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கப்போகிறார்.

மேஷம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானை விளக்கேற்றி வழிபடுங்கள்.

ரிஷபம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசி அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் பண வரவு அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு இன்பச்சுற்றுலா சென்று வாருங்கள்.

மிதுனம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று ஏழைகளுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.

கடகம்
சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

சிம்மம்
உங்கள் ராசியில் பயணம் செய்யும் சுக்கிரன் இன்னும் சில நாட்களில் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களுக்கு மல்லிகை, முல்லை மலர்களை தானமாக வாங்கித்தரலாம்.

கன்னி
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

துலாம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். படிப்பாக வெளிநாடு செல்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய விரைய செலவுகள் குறையும்.

விருச்சிகம்
சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மனம் உற்சாகமடையும் வகையில் பல சம்பவங்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க அதிக நன்மைகள் நடைபெறும்.

தனுசு
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமரப்போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்
உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணம், விலை உயர்ந்த நகைகளை பத்திரமாக வைத்திருக்கவும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு அடைகளை தானமாக கொடுக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications