மேஷ ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் சுக்கிரன்.. குஷியோ குஷி.. ஆசைப்பட்டதெல்லாம் நடக்கப் போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் வருகிற மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

Sukkiran peyarchi Lucky zodiac signs

சுக்கிரன் பெயர்ச்சி

நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசியின் 12 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைகிறார். 12 ஆம் வீடு என்பது செலவு, பயணம், சுப செலவுகள் போன்றவற்றை குறிக்கும். சுக்கிரன் குருவுடன் பரிவர்த்தனை செய்கிறார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வண்டி வாகனங்கள் வாங்குவது, உள்ளூர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான, சுப விரையம் செய்வதற்கான காலகட்டமாக இருக்கும்.

பண வரவு அதிகரிக்கும்

உங்கள் கையில் இருக்கும் சேமிப்புகளுக்கு ஏற்றவாறு செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். வீடு, நகை, வாகனம் என சுப செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். குருவின் வீட்டில் சுக்கிரனும், குரு வீட்டில் சுக்கிரனும் மாறி இருப்பார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உங்களுக்கு செலவுகளையும், வரவுகளையும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பண வரவு அதிகரிக்கும். அதற்கேற்ற செலவுகளும் வரும். எனவே, கையில் வரும் பணத்தை நல்ல விஷயங்களுக்குச் செலவு செய்வது அமோகமான நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது

உங்களுக்கு விருப்பமான காரியங்களை செய்வதற்கு அருமையான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 12 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு குடிபெயர சரியான நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாத வாக்குவாதங்கள் உண்டாகும். பெற்றோர், பெரியோரிடம், துணையிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சுபச் செலவுகள்

உங்களுக்கு ஒரு திட்டம் இருந்தால், உங்களுடைய துணைக்கும் வேறொரு திட்டம் இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய வரவு, பணம் வரும், அதிர்ஷ்டம் கொட்டும் என்று நம்ப வேண்டாம். சுப செலவுகள் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவது, வண்டி வாகனங்கள் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருள்கள், நகை, விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவதற்கான காலகட்டமாக இருக்கும். சுபச்செலவுகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+