சுக்கிரன் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமா மாறப் போகுது
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.
ரிஷப ராசி பலன்
2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தையும், யோக பலத்தையும் அதிக அளவில் பெறப் போகிறவர்கள் ரிஷப ராசியினர்தான். ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் உச்சமடைகிறார். 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமருவதால் பண விரையங்கள் ஏற்படும். ஆனால், அது சுப விஷயங்களுக்கான செலவுகளாக இருக்கும். இந்த சுக்கிரப் பெயர்ச்சி ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தையாவது கொடுக்காமல் போகாது.
காதல், உறவு, மனைவி, ஆடம்பரம், ஜாக்பாட், லாட்டரி போன்ற அதிர்ஷ்டங்களைப் பெறப் போகின்றீர்கள். அதிர்ஷ்டக்காற்று உங்களுக்கு கட்டாயம் வீசும். வாகனம் வாங்குவது, மற்றம் செய்வது போன்றவற்றை செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, ஆடை, ஆபரணங்கள் வாங்குவது, வாய்ப்புகள் தேடி வரும். பயணங்கள் செய்து மகிழ்வீர்கள். வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு கட்டாயம் வாய்ப்புகள் தேடி வரும். ருசியான உணவுகளை சுவைப்பீர்கள். கலைத் துறையினருக்கு பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுத்தருள்வார்,
திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு, புராஜெக்ட்கள் வெற்றி அடைவது போன்ற நல்ல காரியங்கள் நடக்கும். சுக்கிரன் 12 இல் அமர்ந்திருக்கிறார். 6 ஆம் அதிபதியாகவும் இருப்பதால் கடனைத் தரும். புதிய கடன்களை வாங்க வைப்பார். திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். அனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும்.
குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யக்கூடிய தன்மை ஏற்படும். படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். நல்ல தூக்கம் இனி. நீங்கள் நினைத்த காரியங்கள், ஆசைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும். 12 ஆம் இடம் என்பது நகர்தல் என்று பொருள். இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்டாய இடமாற்றம் உண்டாகும். வேலை, தொழில், வியாபாரம் ரீதியாக இடமாற்றம் உண்டாகக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தொழில், வேலை நிமித்தமாக அடுத்த மாவட்டம், மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கேதுவுடைய நட்சத்திரத்தில் பிராயணம் செய்வார். கேது 4 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய சிறிய மருத்துவச் செலவுகள் உண்டாகும். தன் உடல்நலம், தாயின் உடல்நலத்தை பேணிக் காப்பது நல்லது.
பெண்கள் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது. ஆண்கள் பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண்கள் ஆண்கள் சார்ந்த விஷயங்களிலும் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது நல்லது. தொழில் விஷயத்துக்காக செலவு செய்வது, அபிவிருத்தி செய்வது, கடன் வாங்குவது போன்றவை உண்டாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உங்களுடைய வரவுக்கேற்ப கடனை வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
தொழிலில் போட்டி பொறாமை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகளே தொழிலில் சிறிய பிரச்சனைகளை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் புதிய விஷயங்களை செய்யும்போது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பகை, வம்பு, வழக்குகள் போன்றவற்றுக்குள் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. ஜூன் 25 ஆம் தேதிக்குப் பிறகு தன்னம்பிக்கை அதிகரிக்கும். 25 க்குப் பிறகு எடுக்கும் முடிவுகள் எல்லாம் வெற்றியைத் தரும்.
தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் ஜெயமாகும். வண்டி, வாகனங்கள் என அனைத்து சுக போகங்களும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். அழகு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு, விடுதிகள் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications