மகர ராசிக்கு அடிச்சது ராஜயோகம்.. தொழிலில் உச்சம் தொடும் காலம்.. பண மழை கொட்டப் போகுது
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.
மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் 5 க்கு உரியவர். பஞ்சம ஸ்தானதிபதி, காதல் ஸ்தானதிபதி, தொழில் ஸ்தானதிபதியாக உள்ளார். இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்து வந்த சுக்கிர பகவான் 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதீத நன்மைகள் கிடைக்கப் போகின்றன. ஆட்சி பலத்துடன் இருக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயின் விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம்
தாயின் உறவு சார்ந்த விஷயங்கள் நல்லபடியாக இருக்கும். தாயோடு சிறிய சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டவர்கள் இனி சரியாகும். 4 ஆம் இடம் என்பது வண்டி, வாகனத்தை குறிக்கக்கூடிய இடம். தற்போது அந்த இடத்தில் சுக்கிரன் அமர்வதால் வீடு கட்டுவது, கட்டிய வீட்டை வாங்குவது, வாகனம் வாங்குவது, வீடு புண்ணியார்ஜனம் செய்வது போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்து சுப காரியங்களையும் செய்து மகிழ்வீர்கள்.
ராஜயோகம்
சுக்கிரன் வாகன அதிபதி என்பதால் வாகனத்தை மாற்றுவதற்கான அருமையான காலகட்டமாக இருக்கும். ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். 4 ஆம் இடம் என்பது விவசாயத்தை குறிக்கக்கூடிய இடம் என்பதால் விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரன் என்பது மகரத்துக்கு ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம்.
தொழில்
4 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன் சமசப்தம பார்வையாக 10 ஆம் ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொழில், கர்ம ஸ்தானம். தன் வீட்டை தானே சுக்கிரன் பார்ப்பதால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். என்ன தொழில் செய்கிறீர்களோ அந்த தொழில் மூலம் கூடுதல் நன்மை கிடைக்கும். கிளைத் தொழிலை உருவாக்குவீர்கள். தொழில் செய்வதற்கான கடன் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பதவி, சம்பள உயர்வு
சொந்த தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றும். நல்ல தொழிலாளர்கள், வேலை ஆட்கள், திறமையான படித்த ஊழியர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் இருக்கக்கூடிய மகரத்துக்கு பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு, உழைப்புக்கேற்ற அங்கீகாரம், கெளரவம், மேலதிகாரிகள் பாராட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வேலையை திறம்பட கச்சிதமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்டம்
ஏழரை சனியால் கஷ்டங்களையும், அனுபவங்களையும் அனுபவித்து வந்திருந்தாலும் தொழிலில் அடுத்தகட்ட வளர்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் நன்மை கிடைக்கும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் எல்லா விதமான நன்மையும் உண்டாகும். மாற்றத்தை விரும்பக்கூடிய அத்தனை மகரத்துக்கும் மாறுதல்கள் உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் அற்புதமான மாற்றம் உண்டாகும்.
திருமண யோகம்
குரு பகவான் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால், சுக்கிரன் 12 ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் சுக ஸ்தானம் வலுப்பெறும். புதிய உறவுகள் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும். அந்த உறவின் மூலமாக உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் 5க்கு உரியவர் என்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் மலரும் காலகட்டமாக இருக்கும். ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில், வேலை, வியாபாரத்தில் நன்மையை ஏற்படுத்தும் அற்புதமான நேரமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications