Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2022: அஸ்தங்கமாகும் சுக்கிரனால் யாருக்கு ஆபத்து..பலன்கள் பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் நெருப்பு ராசியான சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி ஆகிறார். கன்னி ராசி சுக்கிரனுக்கு நீச்ச வீடு என்றாலும் உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து நீச்சபங்கமடைகிறார். சூரியனுக்கு வெகு அருகில் சுக்கிரன் அஸ்தங்கமும் அடைகிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியாலும் அஸ்தங்கமடையும் சுக்கிரனாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் ஒளி பொருந்திய கிரகம்.சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.

சுக்கிரன் வக்ர நிலையில் இல்லாத போது சூரியனுக்கு 10 டிகிரியில் வரும் போது அஸ்தங்கம் அடைகிறது. கன்னி ராசியில் சூரியன் பயணம் செய்கிறார். சிம்ம ராசியில் உள்ள சுக்கிரன் இன்னும் சில நாட்களில் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி சூரியன், புதனுடன் இணையப்போகிறது. சுக்கிரன் சூரியனுடன் நெருக்கமாக இருக்கும் போது அஸ்தங்கம் அடைகிறது. புரட்டாசி மாதம் 4ஆம் தேதி முதல் கார்த்திகை 7ஆம் தேதி வரைக்கும் சுக்கிரன் அஸ்தங்க நிலையிலேயே பயணம் செய்கிறார். அஸ்தங்க தோஷம் சிலருக்கு ஏற்படும். அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் தான் தர வேண்டிய பலனை சூரியனிடம் ஒப்படைத்து விடுகின்றன. எனவே இப்போது சுக்கிரன் தர வேண்டிய பலனை சூரியன் தரும். சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்திருக்கும் நேரத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி. சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பண வருமானம் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளியூர் பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

 மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அமர்வதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும் கவனம் தேவை. நவராத்திரி பண்டிகை காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.

சிம்மம்

சிம்மம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் சங்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களுக்கு மல்லிகை, முல்லை போன்ற வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.

கன்னி

கன்னி

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

துலாம்

துலாம்

உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குடியேறப்போகிறார். சுப விரையம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதால் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் துளசி செடிகளை வளர்த்து முறைப்படி வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம்.

 மகரம்

மகரம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். பணம் பொருளை பத்திரமாக வைக்கவும்.

மீனம்

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+