தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு பராபவ ஆண்டில் அதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு கும்பம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. கும்பத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசியினருக்கு பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் தொந்தரவுகள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகளில் சாதகம் ஏற்படும். எதிரிகளிடம் கோபப்படுவது, பகை வளர்ப்பது போன்றவை தவிர்ப்பது நல்லது. இணக்கமாகச் சென்று வழக்குகளை முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
பகை வேண்டாம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழிலில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். யாரையும் சபிப்பது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஆரோக்கியம்
வயிறு, முதுகு, கழிவுப் பாதை, மறைமுக ஸ்தானங்களில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முகத்தில் உள்ள உறுப்புகள், மூளை, சுவாசக் கோளாறில் கவனம் தேவை. ராகு ஜென்மத்தில் இருப்பதால் ஒருவிதமான மன அழுத்தங்கள் இருக்கும். குடும்பத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். வழுக்கலான இடங்களில் மிகுந்த கவனம் தவை.
தடை நீங்கும்
தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். உங்களின் பெயர், புகழ் உயரும். பாராட்டுகள், விருதுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்த எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும. நெடுந்தூரப் பயணம் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்கும்.
வழிபாடு
மனதில் இருந்து வந்த பயம் நீங்கும். எதிர்காலத் திட்டங்களை தீட்டுவீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்குவீர்கள். வாக்கு, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருநள்ளாறுக்குச் சென்று வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications