For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன அமைதி தரும் கூடலூர் ' திரிசூல வடிவ' காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்... பக்தர்கள் பால்குடம்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

Google Oneindia Tamil News

தேனி: கூடலூர் வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பலரும் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

ஏப்ரல் 26ம் தேதி விழா, காப்பு கட்டி முளைப்பாரி பயிரிடுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் பெண்கள் முளைப்பாரி கும்மி கொட்டி ஆராதனை செய்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக வைபவம் செவ்வாய்க்கிழமை மாலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

கூடலூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா - விதை நெல் மணிகளை சுவாமிக்கு படைத்த விவசாயிகள் கூடலூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா - விதை நெல் மணிகளை சுவாமிக்கு படைத்த விவசாயிகள்

 கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

3 காலங்களாக பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலச தீர்த்தங்களை கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பால், பன்னீர், இளநீர், திரவியம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. பின்னர், அம்பிகை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திரிசூலவடிவ காளியம்மன்

திரிசூலவடிவ காளியம்மன்

இக்கோயிலில் உள்ள அம்பிகை, அவளது ஆயுதமான திரிசூலத்தின் வடிவத்தில் காட்சியளிக்கிறாள். எனவே, திரிசூலத்திற்கே அம்மன் போல அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆயுதமே இங்கு தெய்வமாக வழிபடுவதால் இங்கு வேண்டிக்கொள்ள தோஷங்கள் பாவங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காரிய வெற்றி கிடைக்கும்

காரிய வெற்றி கிடைக்கும்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

பால்குடம் நேர்த்திக்கடன்

பால்குடம் நேர்த்திக்கடன்

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் காளியம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாள பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

English summary
Crowds of devotees attended the kumbabhishekam held at the Sri Kaliamman Temple located on Gudalur VOC Street. Many devotees come here to take milk and pay obeisance Theni district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X