பாகிஸ்தானில் தலைவிரித்தாடப் போகும் பஞ்சம்.. இந்தியாவில் என்ன நடக்கும்? - பஞ்சாங்கத்தில் பகீர் தகவல்
வைகாசி மாத பலன்: சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. பாகிஸ்தானில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்றும், இந்தியாவில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு விவரங்களை இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் மலைச்சரிவு, வெள்ளப்பெருக்கு அதிக அளவில் ஏற்படும். பாகிஸ்தானில் கடும் பஞ்சம் ஏற்படப் போவதாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்களுக்கு போதாத காலமாக இருக்கும். சீனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலநடுக்கம், புயல் போன்றவை ஏற்படும். சுக்கிரன் வீட்டுக்கு சூரியன் வரக்கூடிய இந்த வைகாசி மாதத்தில் யுத்த ஆயுதங்களால் பல அப்பாவிகள் உலகம் முழுவதும் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.

இந்தியாவிலும் பல்வேறு சேதங்கள் ஏற்படும். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே பாதிப்புகள் காணப்படும். விலைவாசி தாறுமாறாக மாறும். தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் தங்கம் தான் ஜெயிக்கும். தமிழகத்தில் வெயில் அதிகரித்தாலும், கேரளத்தில் மழைப் பொழிவு ஏற்படும். ஆந்திர மாநிலத்தில் புயல் தாக்கங்கள் காணப்படும். தலைவர்கள் தங்கள் பயணத்தை குறைத்துக் கொள்ளும் காலம் ஏற்படும்.
வான்வெளி பயணம் தடைபடும். யுத்தத்தால் பிரச்சனை வரும். போர் மேகங்கள் வரும், பூகம்பம் வரும். தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படும். மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படும். தலைவர்கள் தவறான முடிவுகளை எடுப்பார்கள். உணவுப் பதுக்கல் காரர்கள் பெரிய சித்திரவதைகளுக்கு ஆளாவார்கள். கடுமையான சட்ட திட்டங்கள் வரும். பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களுடைய எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
அதேபோல, இந்தியாவிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நிலை ஏற்படும். எல்லைப் பகுதிகளில் பெரிய பாதிப்புகள் காணப்படும். தமிழ்நாடு வரை அது எதிரொலிக்கும். குரு ஏற்கனவே புதனுடைய வீட்டில் வந்திருப்பதும், திருக்கணிதப்படி சனி மீனத்தில் இருப்பதும், கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேது இருப்பதும் என்று கிரகங்கள் களேபரமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். அப்பாவி மக்கள் பெரும் பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.
இயற்கை கோர தாண்டவம் ஆடும். கடல் பகுதி உள்ளே வரும். வெள்ளம், மழைப்பொழிவு, காற்றால் பிரச்சனை ஏற்படும். மக்கள் மீது அன்பு கொண்டிருக்கும் தலைவர்கள் சமாதானம் செய்வதற்கு முயற்சித்து மாதத்தின் பிற்பகுதியில் வெற்றியைக் காண்பார்கள். 30.05.2025 இல் இருந்து படிப்படியாக மாறும். ஆனாலும், இந்தப் போராட்டங்கள் எல்லாம் நாம் கணக்கில் கொண்டாலும் ஆடி மாதம் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சேமிப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலீடுகளில் யோசித்து பணம் போடுவது நல்லது. தலைவர்கள், மக்கள் மீது சிறிது அன்பு கொண்டு வரி விதிப்பை சிந்தித்து போடுவது, விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை பதுக்கல்காரரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications