துலாம் ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. தொட்டதெல்லாம் வெற்றி

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

thulam-rasi-palan-what-kind-of-benefits-will-get-thulam-libra-rasi-people-during-the-month-of-aav

துலாம்

ஆவணி மாதத்தில் அதிக அளவில் யோக பலன்களை துலாம் ராசிக்காரர்கள் பெறப் போகின்றனர். லாபம், சந்தோஷம், அனுகூலங்கள் ஏற்படும். மகான்கள் வழிபாடு, குருமார்கள் வழிபாடு என உங்களுக்குப் பிடித்த மகான்களை வழிபடுவது அற்புதமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ரத்த அழுத்தம், அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

தடைகள் நீங்கும்

ஏதாவது ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. துணையிடம் மனம் விட்டுப் பேசுவது உங்களுக்கு பாரத்தைக் குறைக்கும். அபிராமி அந்தாதியில் 40 ஆவது பாடல், 54, 59, 75, 90 ஆவது பாடல்களை கேட்பது, படிப்பது நன்மையைக் கொடுக்கும். திருமணத் தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வருகை ஏற்படும்.

தைரியம், நம்பிக்கை

எதையும் சமாளிக்கலாம் என்கிற தைரியமும், நம்பிக்கையும் ஏற்படும். பெற்றோர், பெரியோருடன் இருந்து வந்த மன வருத்தங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

புது வீடு, நிலம்

விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அதிகமாக இன்டீரியர் டெக்கரெட் செய்வது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொள்வது போன்ற விஷயங்களை செய்வீர்கள். அனைத்து விதமான சுபகாரியங்களும் நடக்கும் மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது.

முன்னேற்றம்

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் ஏதோ ஒருவிதமான தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அதுபோன்ற நிலை பரிபூரணமாக மாறும். ஏற்றம், வளர்ச்சி நிறைந்த மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு ்அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+