Rasi Palan This Week: துலாம் ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கப் போகுது
வார ராசி பலன்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் சூப்பரான நேரம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அனுகூலத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உள்ளதால் கவலைப்படவே தேவையில்லை. சுப காரியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
புதிய வீடு வாங்கும் யோகம்
தாய் வழி, தந்தை வழி உறவுகளில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சந்தோஷங்கள் காணப்படும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய செல்போன்களை வாங்கும் யோகம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும்.
பாதிப்புகள் நீங்கும்
தொடர்ந்து இருந்து வந்த பாதிப்புகள், கஷ்டங்கள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் அதிகளவிலான ஏற்றமும், அதிக முன்னேற்றமும் சந்தோஷமும் ஏற்படும். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொடர்ச்சியாக இருந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
முன்னேற்றம் ஏற்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான வளர்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அதே சமயம், மற்றவர்கள் விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள், தெய்வ மார்க்க பயணங்கள், மலைப் பிரதேச பயணங்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும்.
மகிழ்ச்சி
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாக இருக்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆச்சரியமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும்.
வழிபாடு
வியாழக்கிழமை தோறும் மகான்கள், பெருமாள், தாயார் வழிபாடு மிக மிக முக்கியம். ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் பிரச்சனைகள், குறை ரத்த அழுத்தம், அனிமிக், தலைசுற்றல் போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications