3 கிரகங்களின் பெயர்ச்சி: துலாம் ராசிக்கு பங்களா வீடு, பணம், தொழில்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேதுவின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு கிடைக்கும் சாதகமான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Thulam lucky zodiac signs

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் கைகூடி வரும் காலமாக இருக்கும். சனி பகவானும் நல்ல நிலையில் இருப்பதால் எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படாது. கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகும். 5 இல் ராகு இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. திருமணம், மறுமணம் செய்வதற்கான அருமையான காலகட்டமாக இருக்கும். 5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் குழந்தை பிறப்பதற்கான அதிக அளவிலான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துலாம் ராசியின் 12 ஆம் வீட்டை சனி பார்ப்பதால் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அதனை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. முதலீடு, பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி பணம் போடுவது, முதலீடு செய்வது போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை.

வெளிநாடு வாய்ப்பு

வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம், விசா, பிஆர் போன்றவை கிடைக்கும். இதுதொடர்பான முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு கைகூடி வரும். ஆவணங்களைக் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏன் அவர்கள் பழகுகிறார்கள் என்பதை யோசித்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.

தொழில்

கடந்த 6 ஆண்டுகளாக தொழிலில் சிறு சிறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். பெரிய அளவில் எந்தவொரு முன்னேற்றமும் இருந்திருக்காது. தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் முதலீடு செய்வது, கடன் வாங்குவது, நல்லது எது, கெட்டது எதுவென்று அலசி ஆராய்ந்து தொடங்குவது நல்லது.

புதிய தொழில்நுட்பங்கள், ஐடியாக்கள் மூலமாக தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கும் வேலைவாய்ப்பு உண்டாகும். பிடிக்காத வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலைகள், புராஜெட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். அதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

எதிரிகள்

5, 6 இல் கிரக அமைப்புகள் நல்ல நிலையில் இருப்பதால் எதிரிகளே இருக்க மாட்டார்கள். மனம் சந்தோஷமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த எதிரிகள் கூட நட்பாக மாறும் சூழல் ஏற்படும். உங்களை நம்பி வருபவர்களுக்கு அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான யோகம் உண்டாகும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

துலாம் ராசி, லக்கின காரர்களுக்கு வீடு வாங்கக் கூடிய அமைப்பு உண்டாகும். தாய், தந்தை வழி சொத்துகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சொத்துகள் உங்களுக்கு சரிபாகமாக வந்து சேரும். நிலம் வாங்குவது விற்பது, வீடு வாங்குவது விற்பது, பங்களா வீடு கட்டுவது, சொகுசு வீடு, மாடி வீடு கட்டும் அமோகமான காலமாக இருக்கும்.

கடன் நீங்கும்

பழைய கடன்களை அனைத்தையும் தீர்த்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால் முதலீடுகள் செய்யாமல் கடன்களை அடைத்து முடிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சனி 6 ஆம் வீட்டில் இருப்பதாலும், குருவின் பார்வை ராகுவின் மேல் இருப்பதாலும் வருமானம் இரண்டு மடங்காக உயரும்.

தான தர்மம்

துலாம் ராசிக்காரர்கள் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு ரீதியான தான தர்மங்களைச் செய்வது அற்புதமான பலன்களைத் தரும். நோட்டு புத்தகங்கள், பென்சில் என உங்களால் முடிந்ததை உங்கள் கைகளாலேயே கொடுப்பது அற்புதத்தை தரும். கஞ்சனூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சுக்கிரன் ஸ்தலத்துக்குச் சென்று வருவது பாதிப்புகளைத் தடுத்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+