வாக்கிய பஞ்சாங்கம் Vs திருக்கணிதம்: சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா?.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: எல்லோராலும் சனிப்பெயர்ச்சி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறதா (2025) அல்லது அடுத்த ஆண்டா (2026) என்ற பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கிறது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..
சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தைப் பொருத்தவரை பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்களை ஜோதிடர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதில், வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றப்பட்டு வரும் பஞ்சாங்கமாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சனி பகவானுக்கு உரிய திருத்தலங்களான திருநள்ளாறு, பிராணேஸ்வரி உள்ளிட்ட பல கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நடைமுறையே பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் கடைப்பிடிக்கப்படுவதால் வாக்கிய பஞ்சாங்கமே சரி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் திருத்தியமைக்கப்பட்ட திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம் ஆகிய இரு பஞ்சாங்கங்களும் ஜோதிடர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர மற்ற பகுதிகளில் திருக்கணிதப் பஞ்சாங்க முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியா, வாக்கியப் பஞ்சாங்கம் சரியா என்ற குழப்பம் ஆண்டாடுகாலமாக உள்ளது. இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்காமல் உள்ளது. இருந்தாலும், ஜோதிடர்கள் அவரவர் அனுபவம், ஆராய்ச்சியைக் கொண்டு திருக்கணிதத்தையும், பஞ்சாங்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி எப்போது, வாக்கிய பஞ்சாங்கப்படி எப்போது என்று பார்க்கலாம்.
2025 Vs 2026 - சனிப்பெயர்ச்சி எப்போது?
திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் இரவு 11:01 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மீனத்துக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவான் அங்கு இரண்டரை ஆண்டுகாலம் தங்கி ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களையும், ஒரு சிலருக்கு படிப்பினைகளையும் கொடுக்கப் போகிறார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மீனத்தில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் 12 ராசியினருக்கும் அருளை வழங்கப் போகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications