வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை திருமண முகூர்த்தம் - பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு
வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்தம் என்பதால் சென்னை கோயம்பேடு மார்கெட்டிலும், மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையிலும் பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை: திருமண முகூர்த்த நாட்கள், வரலட்சுமி பண்டிகை, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூக்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு விழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக அத்தப்பூ கோலம் போடப்படுவது வழக்கம். இதற்காக ஓசூர், மதுரை, திண்டுக்கல் நிலக்கோட்டை, கோவை, தோவாளை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மலர்ச் சந்தைகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

கொரோனா காரணமாக கேரளா பூ வியாபாரிகள் நேரடியாக வர முடியாத நிலையில், தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அதன்படி பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் இன்றி வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்ட தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது. சுமார் 500 டன்னுக்கு அதிகமாக வண்ண பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ, 450 ரூபாய்க்கு விற்பனையான மல்லிப்பூ இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, கடந்ந இருதினங்களுக்கு முன்னர் 300 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1,100 ரூபாய்கு விற்பனையாகிறது. கிரேந்தி பூ 90 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆரஞ்சு கிரேந்தி 120 ரூபாய், ரோஸ் 250 ரூபாய், செவ்வந்தி பூ 200 ரூபாயிலிருந்து, 350 ரூபாய் க்கும் விற்பனையாகிறது.
மதுரையில் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மதுரை மல்லி இன்று 2000க்கு விற்கப்பட்டு வருகிறது. முல்லைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் பட்டன் ரோஸ் ரூபாய் 200க்கும், செவ்வந்திப்பூ 150 ரூபாய்க்கும் அரளிப்பூ ரூபாய் 150, சம்பங்கி ரூபாய் 200, கோழிக்கொண்டை பூ ரூபாய் 100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் 60 கடைகளுடன் இயங்கி வரக்கூடிய மதுரை மலர் சந்தையில் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக பூ வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தொற்று வந்தபிறகு பூக்கள் பயன்பாடு குறைந்ததால் மலர்ச் சந்தைகளில் பூக்கள் வியாபாரம் குறைந்தது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும் பூக்கள் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே இருந்த பூந்தோட்டங்களை அழித்து மாற்று விவசாயத்தில் இறங்கினர். மதுரையில், ஆண்டு முழுவதும் வரவேற்பு பெறக்கூடிய பெரும்பாலான மல்லிகைத் தோட்டங்களை விவசாயிகள் அழித்தனர். அதனால், தற்போது மலர்ச் சந்தைகளுக்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. மல்லிகை மட்டுமில்லாது மற்ற பூக்கள் வரத்தும் முன்புபோல் சந்தைகளில் இல்லை.
இந்நிலையில் ஓணம் பண்டிகையுடன் வரலட்சுமி பண்டிகையும், முகூர்த்த நாட்களும் தொடங்கிவிட்டதால், இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தை நீண்டகாலத்திற்குப் பிறகு களைகட்ட ஆரம்பித்தது. உள்ளூர் மக்கள் பூக்கள் வாங்கத் திரண்டனர். அதுபோல், கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள், ஓணம் பண்டிகைக்குத் தேவையான பூக்களை வாங்கத் திரண்டனர். அதனால் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்தது. நேற்று கிலோ 500க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் கிலோ ரூ.700, சம்பங்கி ரூ.400, முல்லைப்பூ ரூ.800, பிச்சிப்பூ ரூ.700, செவ்வந்தி 150, பட்டன் ரோஸ் ரூ.220, தாழம்பூ ஒன்று ரூ.650 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது.
70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ரோஜா இன்று 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி 120 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை 600 ரூபாய்க்கும் பன்னீர் பூ 1 கிலோ 150 ரூபாய்க்கும் 1 கிலோ அரளிப்பூ 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ சாமந்தி 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது திருமணம் உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களும் தொடங்கிவிட்டதால் அனைத்து வகைப் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளை முன்னிட்டு இன்று திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பிரதோஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை இன்று ஒரேநாளில் கடைபிடிக்கப்படுவதால் இன்றைய நாள் சிறப்பானதாக கருதப்பட்டு அனைத்து சுப நிகழ்ச்சிகளும் இன்றே நடந்து வருகின்றன. அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தாலும், கோயில் வாசலில் வைத்து பெரும்பாலோனார் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் தெற்கு மற்றும் வடக்கு கோபுர வாசலில் நின்று ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர். பழனி முருகன் கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், புதுமண தம்பதிகள் வேல் அருகே நின்று திருமணத்தை நடத்தி கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதபெருமாள் கோவில், சிவகாசி சிவன் கோவில் என அனைத்து கோயில்களிலும் நுழைவு வாயிலில் நின்று பல்வேறு புதுமண தம்பதிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதில் அடிதடி சண்டையும் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், காவடி எடுத்தல், மொட்டையடித்து காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டுமே ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வந்திருந்த பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காமலும் வந்திருந்தனர். கூட்டத்தில் இருந்த யாருக்குமே கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் இருந்ததாக தெரியவில்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications