Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. வெளிநாடு செல்லும் யோகம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே யோகாதிபதியாகிய சூரியன் லாப ஸ்தானத்தில் லாபாதிபதி புதனுடன் சேர்ந்திருக்கிறார். அதனால், இந்த புரட்டாசி மாதத்தில் எல்லா விதத்திலும் ஜெயம் உண்டாகும். நல்லவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு, செல்வாக்கு அதிகரிக்கும், புதிய வேலைகள் கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விசா கிடைப்பதற்கான வாய்ப்பும் உண்டாகும். சுக்கிரனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். தங்க நகைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவை புதிதாக வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். ஏற்கனவே கிரகப் பிரவேஷம் செய்து முடித்த வீட்டிற்கு நீங்கள் சென்று அமரும் வாய்ப்பு உண்டாகும்.
திடீர் செலவு
உங்களுடைய ராசிக்கு ஆதரவாக வெற்றி, நன்மை தரக்கூடிய வகையில் புதன் அமர்ந்திருக்கிறார். வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். பற்று, வரவு அதிகமாகும். வாடிக்கையாளர்களும் அதிகமாக வருவார்கள். புதிய ஏஜென்சி எடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளதால் திடீர் பயணங்கள், திடீர் அலைச்சல்கள், திடீர் செலவுகள் போன்றவை ஏற்படும்.
புதிய வேலைவாய்ப்பு
உத்தியோகத்தைப் பொருத்தவரை நல்ல பெயர் கிடைக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறிய சிறிய சலுகைகள் அலுவலகத்தில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணிப்பது நல்லது.
வழிபாடு
குழந்தைகள் உண்மை பேசுகிறார்களா என்பதைப் பார்த்துக் கொள்வதும் நல்லது. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் ஜெயித்து காமிக்க சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது. பார்வையற்றவர்களுக்கு பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம் தானமாகக் கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications