விருச்சிக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப் போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

viruchigam-rasi-palan-viruchigam-scorpio-rasi-people-will-get-fortuned-and-good-benefits-in-augus

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த 8 மாதங்களாக பெற்ற துன்பங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். 11 ஆம் இடம் எனும் வெற்றி, லாப ஸ்தானத்தில் ராசிநாதனாகிய செவ்வாய் மாதம் முழுவதும் வலிமையான அமைப்பில் இருக்கிறார். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைக் காணும் மாதமாக இருக்கும்.

செலவுகள் அதிகரிக்கும்

8 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் இருக்கிறார். 20 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் 9 ஆம் இடத்துக்கு வருவது யோகமான அமைப்பாகும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வேறு ஒருபுறமாகப் போனாலும் கடைசியில் அதில் ஒரு யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் ராகுவும், 5 ஆம் இடத்தில் சனி செவ்வாயின் பார்வையில் இருக்கின்றனர். செலவுகள் அதிக அளவில் இருக்கும். அந்த அளவுக்கு வரவும் இருக்கும்.

வீடு சார்ந்த பிரச்சனைகள்

பிள்ளைகளால் செலவுகள் வரும். அவர்களுடைய படிப்புக்கு செலவு செய்வீர்கள். ஆனால், எல்லாவற்றையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் கேட்கின்ற பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து செலவுகளை சமாளிப்பீர்கள். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் வரும். சொந்த ஊர்களில் வீடு கட்டுபவர்களுக்கு வீடு சார்ந்த விஷயங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரும்.

யோகம்

தூரத்தில் இருப்பவர்களுக்கு அம்மாவின் நினைவு வந்து போகும். வயதிற்கு ஏற்றாற்போன்று இது மாறும்.திருமண விஷயத்தில் இருந்து வந்த மன அழுத்தம் தீரும். முதல் திருமணம் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். மொத்தத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+