Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் விருச்சிக ராசி.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளியூர், வெளிநாடு போகும் யோகம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த விஷயங்கள் நடந்து முடியும். சமார்த்தியமான விஷயங்கள் நடக்கும். விரயத்தில் சூரியன், செவ்வாய், புதன் இருப்பதால் சிலருக்கு கால் பாதம், மறைமுகமான பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும்.
அனுகூலம்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். விரயங்கள் ஏற்படும் காலகட்டமாக இருந்தாலும் சுப விரயமாக இருக்கும். விரயத்தில் கவனம் தேவை. மனதில் இருந்த பாரங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த பதற்றம் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
முதலீடு
வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் ஏற்படும். உறவுகளால் ஏற்றம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும்.
சிக்கல் நீங்கும்
உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். வண்டி, வாகனங்களை வாங்க அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரகசியமாக ஒரு காரியத்தை செய்யும்போது ஜெயிப்பீர்கள்.
வழிபாடு
திடீர் பண வரவு உண்டாகும். நிறைய சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். ஏற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். நிறைய பயணங்கள் செய்யும் வாரமாக இருக்கும். உச்சிஷ்ட மகா கணபதி வழிபாடு மேன்மையைக் கொடுக்கும்












Click it and Unblock the Notifications