துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கப்போகும் மாற்றம்.. புதிய அறிமுகங்களிடம் கவனம்.. ஆபத்து காத்திருக்கு
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமைகளில் தெய்வ வழிபாடு மிக மிக முக்கியம். முதுகுத் தண்டுவடம், அடிவயிறு, கழிவுப் பாதையில் சிறு சிறு உபத்திரவங்கள் ஏற்படும். மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய அறிமுகங்களிடம் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. புதிய பயணங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் கைகூடக் கூடிய நல்ல காலகட்டம்.
அனுகூலம்
உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக் கண்ணாடி ஆராய்ச்சி கூடவே கூடாது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கும், லாபமும் அற்புதமான அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அனுகூலங்கள் காணப்படும். புதன்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
கவனம்
பயணங்கள் சமயத்தில், செல்போனில் புதிய அறிமுகங்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வீடியோ, லிங்குகளில் வந்தால் தொடாமல் இருப்பது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம், அனுகூலம், படிப்படியான நிம்மதி ஏற்படும். நல்ல முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள் தீரும். லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
பிரச்சனைகள் தீரும்
உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பனிபோல விலகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும். மனதில் இருந்து வந்த பாரம் குறையும். தெரியாதவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஆனி மாதம் முழுவதும் உங்களை சுருக்கிக் கொள்வது நல்லது.
வழிபாடு
ஆடி மாதத்தில் இருந்து உங்களுக்கு படிப்படியான முன்னேற்றமும், சந்தோஷமும் ஏற்படும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகளை முடிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications