கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும்.. உங்க லைசன்ஸ் காலியாகிடும்.. புதிய டிராபிக் விதிகள்..நோட் பண்ணுங்க
சென்னை: நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. இந்த நிலையில் லைசன்ஸ் நீக்க நடவடிக்கையும் அமலுக்கு வந்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி நீங்கள் கடந்த வாரம் ஒரு போக்குவரத்து விதிமீறல் செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு உங்களுக்கு செல்லான் வந்துள்ளது. இதை paytm உள்ளிட்ட எந்த செயலி, இணைய பக்கம் மூலமாகவும் செலுத்தலாம்.

ஆனால் நீங்கள் அபராதத்தை செலுத்தவில்லை. அப்படி செலுத்தாமல் போகும் பட்சத்தில்.. 3 மாதம் உங்களுக்கு டைம் தரப்படும். 3 மாதத்தில் செலுத்தவில்லை என்றால் உங்கள் லைசன்ஸ் நீக்கப்படும். மொத்தமாக உங்களின் லைசன்ஸ் செயல் இழக்கப்படும்.
பின்வரும் போக்குவரத்து விதிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன
1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால்
அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.
3. சீட் பெல்ட் அணியாதது
சீட் பெல்ட்டைக் அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும்.
4. வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது
வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
5. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். பல மாநிலங்களில் ரூ. 2000 அபராதம் இருந்தது .
6. இரு சக்கர வாகனங்களில் டிரிபிள் ரைடிங்
டிரிபிள் ரைடிங் அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
7. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதனுடன் மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது சமூக சேவை செய்ய வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. மீண்டும் விதி மீறினால் ₹4,000 அபராதம் விதிக்கப்படும்.
8. மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
மாசுபாட்டின் கீழ் (PUC) சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது சமூக சேவையுடன் கூடிய ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
9. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்
கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.
10. அவசரகால வாகனங்களைத் தடுத்தால்
ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி கொடுக்க தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.
11. பொதுச் சாலைகளில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்
பொது சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவோர் அல்லது வேகமாக ஓட்டினால், மீறுபவர்களுக்கு இப்போது உள்ள ₹500க்கு பதில் ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.
12. ஓவர்லோடிங் வாகனங்கள்
ஓவர்லோடிங் வாகனங்களுக்கான அபராதம் ₹2,000ல் இருந்து ₹20,000 ஆக உயர்ந்துள்ளது.
13. ஜம்பிங் டிராபிக் சிக்னல்கள்
சிக்னல் ஜம்பிங்கிற்கான அபராதம் ₹500ல் இருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
14. சிறார்களின் குற்றங்கள்
சிறார்களால் (18 வயதுக்குட்பட்ட) போக்குவரத்துக் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அபராதம் ₹2,500ல் இருந்து ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் பாதுகாவலர்/வாகன உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வாகனத்தின் பதிவு ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், மேலும் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications