Bison : பைசன் படம் உலக அளவில் பெற்ற வசூல் இத்தனை கோடியாம்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
சென்னை: தமிழ் சினிமா இப்போ பண்ணுற அலப்பறை இருக்கே... சும்மா வேற லெவல்! இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்துல, நம்ம துருவ் விக்ரம் நடிச்ச 'பைசன்' (BISON) திரைப்படம், ரிலீஸ் ஆனதுல இருந்து பெரிய பேசுபொருளா இருக்கு. இப்போ படத்தோடத் தயாரிப்பு நிறுவனமே ஒருப் போஸ்டரைப் போட்டு, "உலகம் முழுவதும் 70 கோடிக்கு மேல வசூல்!"னு அறிவிச்சிருக்காங்க! இந்த வசூல் சாதனை, எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தான்!

பைசன் பட கதை
மாரி செல்வராஜ் படங்கள்னா, சும்மா ஏதோ கதை இருக்காது. ஒரு அழுத்தமான சமூகப் பின்னணி இருக்கும். அதேபோல, 'பைசன்' திரைப்படம் இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையையும், அவரோடப பயணத்தையும் மையமா வச்ச உண்மைக்கதையா உருவாகியிருக்கு!
துருவ் விக்ரம் இந்தப் படத்துல கபடி வீரரா இறங்கி அடிச்சிருக்கார்னு தான் சொல்லணும்! அவரோடத் தீவிரமான நடிப்பு, உடல்மொழி, மற்றும் கிராமப்புற இளைஞனா அவர் கொடுத்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் (TRANSFORMATION) பெரிய அளவில் பாராட்டுகளைக் குவிச்சுட்டு இருக்கு!. ஒரு சாதாரண கிராமத்துப் பையன், கபடி விளையாட்டல தன் வாழ்க்கையா மாத்தி, இந்திய கபடி அணி வரைக்கும் போறதுக்குள்ள என்னென்ன சவால்களைச் சந்திக்கிறான்? அவனோட வெற்றி பின்னணி என்னன்னு பயங்கர எமோஷனலா இந்த கதையை மாரி செல்வராஜ் செதுக்கியிருக்கார்.
படத்தில் இருக்கும் பலம்
இந்த வெற்றிக்கு துருவ் விக்ரம் மட்டும் காரணமில்லை. படத்தில் நடிச்ச பிரபலங்களும் மாரி செல்வராஜின் கதை சொல்லலுக்குப் பெரிய பலம் சேர்த்திருக்காங்க!. துருவ் விக்ரமுடன், மலையாள நடிகை ஹீரோயினாக நடிச்சிருக்காங்க. அப்புறம், இந்தப் படத்துல பசுபதினு நிறைய பேர் முக்கியக் கதாபாத்திரங்கள்ல வந்து கலக்கி இருக்காங்க!
பிரபலங்கள் கொண்டாடிய பைசன்
படம் ரிலீஸான நாள்ல இருந்து, சினிமாக்காரங்க மத்தியில 'பைசன்' படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் வேற லெவல்!. படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட, "மாரி செல்வராஜ் சமூகக் கதைகளை எடுத்துச் சொல்ற விதமேத் தனி! துருவ் விக்ரம் நடிப்புல ஒரு நேர்மை இருக்கு!"ன்னுப் பாராட்டி இருந்தார். வெற்றிமாறன், பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்களும், இந்தப் படம் ஒரு அழுத்தமானக் கதையை சொல்லி இருக்கிறது என சமூக வலைதளங்கள்ல வாழ்த்தி இருந்தாங்க!
பயணத்தை தொடரும் பைசன்
அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் தயாரிச்ச இந்தப் படம், இப்போ 70 கோடிக்கும் மேல உலகளவில் வசூல் செஞ்சு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெருமையை கொடுத்திருக்கு. ஒரு நல்ல, நேர்மையான சினிமாவுக்கு எப்பவும் மக்கள் சப்போர்ட் இருக்கும்னு இந்த வசூல் நிரூபிச்சிருக்கு! நீங்க இன்னும் இந்த படத்தை பார்க்கலைன்னா, விரைவில் NETFLIX-ல ஸ்ட்ரீம் ஆக போகுது, பாருங்க!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications