Cheran: தமிழக அரசு விருது தங்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் தானா? ஆதங்கத்துடன் பேசிய இயக்குனர் சேரன்
சென்னை: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் திரைப்பட விருதுகள், சினிமா துறையினருக்கு ஒரு பெரிய அங்கீகாரம். ஆனா, இந்த விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் "தேர்வு நியாயமா நடந்துச்சா?"ன்னு ஒரு சர்ச்சை கிளம்பாம இருக்கறதில்லை. இந்த வருஷம் அறிவிக்கப்பட்ட விருதுகள் பற்றியும் அதே மாதிரி விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.
இந்த விஷயத்தில், இயக்குநர் சேரன் வெளிப்படையாகவும், அதிருப்தியோடவும் பேசிருக்கிறார். குறிப்பா, தன்னோட 'திருமணம்' படம் தேர்வு குழுவால் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவர் முன்வைத்த கேள்விகள், சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சேரன் ஆதங்கம்
இந்த விவகாரத்தில் சேரன் பேசும்போது, "பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவி தொகை, திருமணத்திற்கு அரசு உதவி - இப்படி சமூக நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து செய்றது பாராட்டுக்குரியது. ஆனா, அதே அரசு விருது கொடுக்கறப்போ, பெரும் பணம் இல்லாத குடும்பங்கள் கடன் படாம, சிக்கனமா எப்படி திருமணம் நடத்தலாம், வாழ்க்கைக்கான சேமிப்பை எப்படி உருவாக்கலாம் என்ற கருத்தோட, விளிம்பு நிலை மக்களுக்காக உருவாக்கப்பட்ட 'திருமணம்' மாதிரி படங்களை தேர்வு குழு ஏன் கண்டுகொள்ளல?"ன்னு கேள்வி எழுப்பினார்.
அதோடு, இது தேர்வு குழுவினரின் நுண்ணிய பார்வை இல்லாததையோ, இல்லாட்டி தங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் விருது கொடுக்குற மனநிலையையோ வெளிப்படுத்துற மாதிரி இருக்கு"ன்னு அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
திருமணம் படம்
'திருமணம்' படம், பெரிய செட், ஆடம்பரம், கடன் வாங்கி கல்யாணம் செய்யுற கலாச்சாரத்துக்கு எதிரா, சிக்கனமான திருமணம் செய்து தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது, அதற்குப் பதிலா அந்த பணத்தை குடும்பத்தின் எதிர்கால சேமிப்பாக மாற்றுவது என்னும் சமூக கருத்துகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
இதனால், இந்த படம் சினிமாவை விட ஒரு சமூக விழிப்புணர்வு படமாகவும் பலரால் பேசப்பட்டது. ஆனா, இப்படிப்பட்ட ஒரு கருத்துள்ள படம் அரசு விருதுகள் பட்டியலில் இடம் பெறாதது தான் சேரனின் பெரிய வருத்தம்.
-
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications