ப்ளூ பிலிமில் நடிக்க சொல்லி டார்ச்சரா? பரிதாப நடிகைகள் ஷோபா, சில்க், விஜயஸ்ரீ! மறைக்கப்பட்ட ரகசியம்
சென்னை: அந்த காலத்தில் நடிகைகளின் தற்கொலைகள் பரபரப்பாக பத்திரிகைகளில் பேசப்பட்டன.. ஷோபா, சில்க் ஸ்மிதாவை போலவே, விஜய ஸ்ரீ என்ற நடிகையும் தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று இதுவரை தெரியவில்லை" என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில் சில்க் ஸ்மிதா பற்றி பேசும்போது, "சில்க் மரணத்தில் பல சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதை உறுதி செய்தோம்.

சில்க் ஸ்மிதா
அதேபோல சில்க்கின் சடலத்தை வாங்க குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.. ஆனால், அது தவறான செய்தி.. அவரது சடலத்தை வாங்கி கொண்டு சென்றார்கள்.. அத்துடன், பெரிய பெரிய நபர்கள் சில்க் ஸ்மிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோல, மார்ச்சுவரியில் துணியில்லாமல் சில்க்கை போட்டு வைத்திருந்ததாக சொன்னார்கள். அதுவும் ஆளாளுக்கு விட்ட கதைகள்.. பிணவறையில் சடலங்களை கொண்டு போனால், அவர்கள் உடுத்தியிருந்த உடைகளுடன் வைத்திருக்க மாட்டோம்.. அதற்கான துணிகளை போட்டுதான் மூடி வைத்திருப்போம்" என்றெல்லாம் தெரிவித்திருந்தார் டாக்டர் காந்தராஜ்.
போஸ்ட் மார்ட்டம்
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "சில்க் ஸ்மிதா, விஜய ஸ்ரீ , படாபட் ஜெயலட்சுமி போன்ற பிரபல நடிகைகளின் உடல்களின் போஸ்ட் மார்ட்டம் சென்னை மருத்துவமனையில் நடந்தது.
அப்போது நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். விஜயஸ்ரீ என்ற நடிகை மாடியில் இருந்து கீழே குதித்து இறந்தார்.. படாபட் ஜெயலட்சுமி விஷம் குடித்துஇறந்துவிட்டார்.. ஒரு பெரிய அரசியல் பிரமுகருடனான பிணக்கில்தான் அவர் இறந்தார்..
யார் அந்த தாடிக்காரர்
சில்க் ஸ்மிதா தற்கொலை என்பது அப்போதே முடிவாகிவிட்டது.. ஆனால் எதற்கான தற்கொலை என்பதுதான் இதுவரை இறப்பில் வெளிவரவில்லை. அப்போது ஒரு தாடிக்காரர் சில்க் கூடவே வருவார்.. அந்த தாடிக்காரர் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பார். அவரது துரோகம் காரணமாகத்தான் சில்க் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார்களே தவிர, எதுவும் உறுதியாக சொல்லவில்லை.
அதேபோல நான் ஜிஎச்-சில் வேலை பார்த்து கொண்டிருந்தபோதுதான் ஷோபா மரணம் நடந்தது.. அன்றைய தினம் நான் டியூட்டிக்கு வரும்போதுதான், ஷோபாவின் சடலத்தை மார்ச்சுவரிக்காக கொண்டு வந்து வைத்தனர்..
ஷோபாவின் மரணம்
ஷோபாவின் சடலத்தை பார்த்ததுமே அது தற்கொலை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. அது தற்கொலை என்று உறுதியாக சொன்னதே நான்தான்.. கழுத்தில் தூக்கு போட்டு இறந்ததற்கான அடையாளம், சான்றுகள் தெரிந்தன..
அப்போது பாலுமகேந்திரா மீதுதான் இந்த மரணத்தின் பழியை சுமத்தினார்கள்.. ஆனால் ஷோபா செய்தது தற்கொலை என்பதை நான்தான் அழுத்தமாக சொன்னேன்.. இது பாலுமகேந்திராவுக்கு நிம்மதி கிடைத்தது.. ஆனால் சிறந்த நடிகைக்கான ஊர்வசி அவார்டை ஷோபா வாங்கிய அன்றைய தினமே ஷோபா உயிரிழந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது.
விஜய ஸ்ரீ நடிகை
ஷோபாவின் தற்கொலைக்கு ஆயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டன.. இப்படி எத்தனையோ எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், எதுக்குமே இதுவரை ஆதாரம் இல்லை.
புளூ பிலிமில் நடிகையை நடிக்க வைக்க வற்புறுத்தியதாகவும், அதனால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்தி பரவியது.. விஜய ஸ்ரீ என்ற நடிகை எதற்காக தற்கொலை செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.. அந்த காலத்தில் நடிகைகளின் தற்கொலைகள் பரபரப்பாக பேசப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications