Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2வது முறையாக புற்றுநோய் பாதிப்பு.. சுற்றி இருப்பவர்களின் ஏமாற்றம்.. சிவப்பதிகாரம் பட நடிகை உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரை உலகில் வெற்றிகள், தோல்விகள் சாதாரணம். ஆனால் வாழ்க்கையே சோதனை மையமாக மாறினாலும் சிரித்த முகத்தோடு நிற்கும் மனிதர்கள் அரிது. அப்படிப்பட்ட ஒரு போராளி தான் நடிகை மம்தா மோகன்தாஸ். இரண்டு முறை புற்றுநோயை வென்றவர்... உடைந்த திருமணத்தை கடந்து வந்தவர்... காதலில் ஏமாற்றத்தையும் சந்தித்தவர்... ஆனாலும் வாழ்க்கையை மீண்டும் நம்பிக்கையோடு பார்க்கிறவர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mamta Mohandas Actress tamil cinema

நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி

காதல், டேட்டிங் குறித்து மம்தா சொன்னது "எனக்கு காதல் செய்வது அல்லது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்களில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்திற்கு பிறகு, ஒரு பெண்ணாக எனது சொந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன். அப்போது ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்கான நான் என் அம்மாவின் சம்மதத்தையும் பெற்றேன்."

"ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை என்னிடம் அவர் மறைத்திருந்தார். அந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது."

பின்னர் நான் வேறொருவரை சந்தித்தேன், ஆனால் அவர் என் நேரத்தை வீணடித்தார். அதனால் இந்த காதலும் டேட்டிங்கும் தேவையற்றது என்பதை உணர்ந்துக் கொண்டேன் என்று தனது மனவேதனையை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

உடைந்த திருமணம்

எனது சகோதரியின் திருமணத்தில் தான் முதல்முதலாக பிரஜித்தை சந்தித்தேன். எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் பொதுவானதாக இருந்ததால் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தோம். பிரஜித் தான் அதனை முதலில் கேட்டார். உடனே என்னுடைய அப்பாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அதற்குப் பிறகு எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது."

திருமணத்தை வாழ்நாள் முழுவதுக்குமான உறவாக நினைத்தேன். ஆனால் 6 மாதத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தது. அது மிகவும் கடினமான முடிவு. இருந்தாலும் அந்நேரம் நான் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.

மீண்டும் திருமணம் குறித்து

நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அது உண்மையான உறவாக இருக்க வேண்டும். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் செய்வதில் இருவரும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும்.

Mamta Mohandas Actress tamil cinema

நோயை வென்ற தைரியம்

இரண்டு முறை புற்றுநோயை எதிர்கொண்ட அவர், அந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் மறைக்காமல், அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தது பலருக்கு பெரிய உந்துசக்தியாக உள்ளது.

திரை பயணம்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர் தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க, மகாராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மை டியர் சிஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+