Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mankatha 2nd day box office: அடேங்கப்பா! மங்காத்தா ரீ ரிலீஸ் 2 நாள் வசூல் இத்தனை கோடி! ஆனாலும் இதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால், ரசிகர்கள் யோசிக்காமலே சொல்லும் ஒரே பெயர் - மங்காத்தா. அஜித்தின் 50-ஆவது படமாக வெளியான இந்த படம், இன்று வரை அவரின் கேரியரில் தனி இடம் பிடித்திருக்கிறது. முதன் முறையாக சால்ட்-அண்ட்-பெப்பர் லுக்கில் அஜித் தோன்றிய படமும் இதுவே. உண்மையில், அந்த லுக் அஜித்தின் திரை வாழ்க்கையை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது என்று சொன்னால் மிகையில்லை.

அஜித்துக்கு பிரபலத்தை கொடுத்த மங்காத்தா இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் வெளியாகிய ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

மங்காத்தா படம் அறிவிக்கப்பட்டபோது, "வெங்கட் பிரபு அஜித்தை எப்படி ஹேண்டில் பண்ணுவார்?" என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு, அந்த எல்லா டவுட்களையும் ஒரே அடியில் உடைத்தது மங்காத்தா. வில்லனாக அஜித்தின் நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் இசை, வேகமான திரைக்கதை - எல்லாமே சேர்ந்து படத்தை மெகா ஹிட் ஆக்கியது.

Mankatha box office Ajith Kumar

ரீ ரிலீஸ் கலாச்சாரம்

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் மீண்டும் உயிர் பெற்றபோது, அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட ஒரே விஷயம் - "மங்காத்தாவை ரீ ரிலீஸ் பண்ணுங்க" என்பதுதான்.

பல வருடங்களாக இருந்த அந்த கோரிக்கையை ஏற்று, படக்குழு ஜனவரி 23ஆம் தேதி மங்காத்தாவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டது. தகவல் வெளியான அடுத்த நிமிடமே, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் திருவிழா மோடுக்கு மாறிவிட்டார்கள்.

மங்காத்தா கொண்டாட்டம்

மங்காத்தா ரீ ரிலீஸுக்கு வந்த ரசிகர்களை பார்த்தால், இது பழைய படம் என்ற உணர்வே இல்லை. மேள தாளம், பட்டாசு, பால் அபிஷேகம், கட்-அவுட்கள் - எல்லாமே புதுப்பட ரிலீஸ் போல இருந்தது.

அஜித் நடித்த 'கேம்பா' விளம்பரத்தை நினைவுபடுத்தும் வகையில், சில இடங்களில் கேம்பா அபிஷேகம் வரை நடந்தது. "தல எப்போதும் தல தான்" என்று சொல்லும் ரசிகர்கள், தியேட்டர்களை திருவிழா மண்டபமாக மாற்றினார்கள்.

இன்னும் ஹவுஸ் ஃபுல்

ரீ ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல். அதுவும், வேலை நாள் என்றே யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இன்றளவும் பல திரையரங்குகளில் மங்காத்தா ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மங்காத்தா வசூல் நிலவரம்

ரீ ரிலீஸ் என்றாலும், வசூலில் மங்காத்தா எந்த சலுகையும் காட்டவில்லை.

முதல் நாள்

தமிழ்நாடு - சுமார் ₹4.5 கோடி, இந்திய அளவில் - சுமார் ₹5 கோடி

இரண்டு நாட்களில்

தமிழ்நாடு - சுமார் ₹8 கோடி, உலக அளவில் - ₹8.5 முதல் ₹9 கோடி வரை

இந்த எண்களை பார்த்த ரசிகர்கள், "இது ரீ ரிலீஸ் இல்லை... பவர் ரீ ஸ்டார்ட்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். சோசியல் மீடியாவில் மங்காத்தா வெறி

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எல்லா இடத்திலும் ஒரே ஹேஷ்டேக் தான் - #MangathaReRelease. "50வது படம் - 100% வெறி", "தல ஸ்டைல் என்றால் இது தான்", "இன்றைக்கும் மங்காத்தாவை மிஞ்ச யாரும் இல்லை" என்று ரசிகர்கள் தங்களின் பழைய நினைவுகளையும், தியேட்டர் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

பலர், "இந்த படம் தான் அஜித்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போனது" என்றும், "சால்ட்-அண்ட்-பெப்பர் லுக் என்றே ட்ரெண்ட் ஆக்கின படம்"
என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Mankatha box office Ajith Kumar

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது, வரும் நாட்களிலும் மங்காத்தா ரீ ரிலீஸ் வசூல் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில், இன்னும் அதிக திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் உருவாகும் என்கிறார்கள் தியேட்டர் வட்டாரங்கள்.

ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. மங்காத்தா என்பது ஒரு படம் மட்டும் அல்ல. அது அஜித் ரசிகர்களுக்கு ஒரு உணர்வு. அந்த உணர்வு தான், பல வருடங்கள் கழிந்தும், ரீ ரிலீஸ் என்ற பெயரில் கூட தியேட்டர்களை நிரப்ப வைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+