சமந்தாவை சுற்றி பின்னப்பப்பட்ட வதந்தி வலை.. 3 டாப் ஹீரோக்களுடன் கிசுகிசு! கொஞ்சம் நஞ்சம் கதையா? அடடா
சென்னை: பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ருத் பிரபு சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்.. நடிப்பையும் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கை, காதல் கிசுகிசுக்கள் என மீடியாவில் எப்போதுமே பேசுபொருளானவர் சமந்தா.. அந்தவகையில், 3 டாப் நடிகர்களுடன் காதல் வதந்திகளில் சமந்தா சிக்கியதையும், மீடியாக்கள் இதை அன்று ஊதிபெரிதாக்கி கொண்டிருந்ததையும் மறுக்க முடியாது.
எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தனர்.. தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமாகாவிட்டாலும், தெலுங்கு பட உலகம் சமந்தாவை வாரி அணைத்து கொண்டது.. தன்னுடைய நடிப்பு திறமும், ஸ்கிரீன் பிரசென்ஸும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது..

நடிகை சமந்தா
ஆனால், எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றாரோ, அந்த அளவுக்கு சர்ச்சைகைளிலும் சிக்கினார்.. அவரைச் சுற்றி பரவிய காதல் கிசுகிசுக்கள் மட்டுமல்லாமல், திரையுலக ஊடகங்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் பல வருடங்களாகவே இதை வைத்து பரபரப்பை கிளப்பி விட்டு கொண்டிருந்தன..
உறுதியான தகவல்கள் எதுவுமே இல்லாதபோதிலும், சமந்தாவை 3 முக்கிய நடிகர்களுடன் இணைத்து ஊடகங்கள் வதந்திகளை கிளப்பியது..

விஜய் தேவரகொண்டா
அதில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தாவுக்கு கிசுகிசு உலாவியது.... காரணம், இவர்கள் சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த 'Khushi' படத்தின் ஷூட்டிங்கில் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்துவிட்டதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டபடி இருந்தன.
அதற்கேற்றபடி, குஷி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பேசும்போது, "விஜய் மனைவி எளிமையாக இருக்க வேண்டும்.. விஜய் குறைவாகவே பேசுவார், ஆனால் டெக்ஸ்ட் மெசேஜ் அதிகம் அனுப்புவார்" என்று கூறினார்..
விஜய் தேவரகொண்டாவின் பர்சனல் விஷயங்களை சமந்தா ஏன் பேச வேண்டும்? நெருப்பில்லால் புகையுமா? அப்படியானால் வதந்தி உண்மையா? என்றும் மீண்டும் மீடியாக்கள் கொளுத்தி போட்ன.. ஆனால், இருவருமே தங்கள் மீதான கிசுகிசுக்களை மறுத்ததுடன், தாங்கள் உண்மையான நண்பர்கள் என்று விளக்கம் தந்தனர்.
நடிகர் சூர்யா
அதேபோல ஒரு பேட்டியில் சமந்தா,"நான் 11ம் வகுப்பு படிக்கும்போது 'காக்க காக்க' படம் வெளியானது; அப்போதிருந்ததே நான் சூர்யாவின் தீவிர ரசிகை! என்று கூறியிருந்தார்..
பிறகு அஞ்சான் பட ரிலீசுக்கு பிறகு சில ஊடகங்கள், சூர்யா - சமந்தாவுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளதாக கூறி, காதல் கிசுகிசுக்களையும் கிளப்பிவிட்டன.. சிலர் இந்த வதந்தியே, PR நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்றார்கள்.. எனினும் இந்த கிசுகிசு அஞ்சான் படத்துடனேயே அடங்கிவிட்டது..
நடிகர் சித்தார்த்
இதற்கு பிறகு நடிகர் சித்தார்த்துடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் சமந்தா.. தன்னுடன் நடித்த நடிகர்களிலேயே மிகவும் பரவலாக பேசப்பட்ட காதல் கிசுகிசு நடிகர் சித்தார்த் பற்றிதான்.
2013-2014 காலகட்டத்தில்,இருவரும் 'ஜபர்தஸ்த்' என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர்.. அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதற்கு இருவருமே மறுப்பு எதுவும் சொல்லாத நிலையில், காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் இருவரும் சேர்ந்து சிறப்பு பூஜைகள் செய்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.
பிறகு, சித்தார்த் வீட்டில் சமந்தா குடியேறிவிட்டார் என்றார்கள்.. அதுமட்டுமல்ல, அதுவரை சமந்தாவின் கால்ஷீட்டுகளை அவரது பெற்றோர் கவனித்து வந்த நிலையில், இனிமேல் சித்தார்த்தின் குடும்பத்தினர்தான் சமந்தாவின் கால்ஷீட்டை கவனிக்க போகிறார்கள் என்றெல்லாம்கூட செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..
பின்னப்பட்ட வதந்தி வலைகள்
ஆனால், கடைசிவரை காதல், கல்யாணம், தனிக்குடித்தனம் என எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.. காளஹஸ்தியில் நடந்தது, ஒரு சாதாரண திரைப்பட பூஜை என்பதும், அதில் சமந்தா, சித்தார்த் இருவரும் பங்கேற்றதும் உறுதியானது..
பொதுவாக, சமந்தா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதுமே மிகக் குறைந்த அளவிலேயே சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வவர் என்பதால், அவரைச் சுற்றி வரும் எந்த தகவலையும் ரசிகர்களும் ஊடகங்களும் பெரிதாக்கி பரப்புவதை வழக்கமாக வைத்திருந்தனர்..
விஜய் தேவரகொண்டா முதல் சித்தார்த் வரை, ஆதாரமற்ற வதந்திகள் உலவினாலும், அந்தந்த காலகட்டத்தில் இந்த வதந்திகள், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு கடினமான தருணங்களையும் உறுதியுடன் சமாளித்து முன்னேறிய விதமே, சமந்தாவுக்கு அபாரமான ரசிகர் ஆதரவை பெற்று தந்திருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications