For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பேட்டி கொடுப்பாரா? மேயர் பிரியா அப்படி சொன்னாரா? சீறிய காயத்திரி! கடைசியில் பார்த்தால் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.

சென்னையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக மழை பெய்தால் சென்னையில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். கடந்த வருடம் கூட சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் அப்படி ஏற்படவில்லை.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மேயர் பிரியா! - மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மீண்டது எப்படி? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மேயர் பிரியா! - மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மீண்டது எப்படி?

சென்னை

சென்னை

இரண்டு வாரமாக சென்னையில் மிக கனமழை பெய்தும் கூட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை. 90 சதவிகித பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வேகமாக வடிந்தது. வெள்ளம் ஏற்பட்ட ஒரு சில இடங்களிலும் உடனே மோட்டார் வைத்து நீர் வெளியேற்றப்பட்டது. இந்த பணிகளை சென்னை மேயர் பிரியா நேரில் கவனித்தார்.

வெள்ளம்

வெள்ளம்

எங்கே வெள்ளம் ஏற்படுகிறது என்பதை பிரியா நேரில் பார்வையிட்டு அங்கு அமைச்சர்களின் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார்.மேயர் பிரியா அரசியலுக்கு புதிது என்பதால் அவருக்கு உதவியாக அமைச்சர்கள் உடன் இருக்கிறார்கள். அதே போல் செய்தியாளர் சந்திப்பிலும் சில விஷயங்களை பேசும் போது அவருக்கு பதற்றம் ஏற்படுகிறது. இதனால் பாஜகவை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் அவரை விமர்சனமும் செய்து வருகின்றனர்.

மேயர் பிரியா

மேயர் பிரியா

இந்த நிலையில் பதிலுக்கு பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள். மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்கவேண்டும், என்று மேயர் பிரியா சொன்னதாக செய்தி பரவி வருகிறது.

மோடி

மோடி

இதை பாஜகவின் காயத்திரி ரகுராம் பகிர்ந்து விமர்சனமும் செய்து இருந்தார். அதில், திமுகவுக்கு சொந்தமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நிறுவன கலைஞர் எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் மற்றும் மேயர் நீங்கள் இருக்கும் போது, பிறகு ஏன் மோடி தேவை? நீங்கள் திமுக பத்திரிக்கை ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் மற்றும் சன் டிவி குடும்பம் உங்கள் மூலம் சம்பாதிக்கலாம். ஏன் மற்றவர்கள்? ஒரு குடும்பம் அரசனாக வாழ நீங்கள் உழைக்க முடியும் ஏன் ஒரு குடும்பத்திற்காக மற்றவர்கள் உழைக்க வேண்டும்?, என்று குறிப்பிட்டு இருந்தார்.

காயத்திரி ரகுராம்

காயத்திரி ரகுராம்

ஆனால் காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பகிர்ந்த இந்த செய்தி பொய்யானது ஆகும். திமுகவினர் சிலரும் கூட இதை உண்மை என்று நம்பி பகிர்ந்து உள்ளனர். ஆனால் மேயர் பிரியா இது போல மோடிக்கு எதிராக எங்கும் பேசவில்லை. அவர் இது மாதிரியான ஸ்டேட்மென்ட் எதுவும் விடவில்லை. சமூக வலைத்தளங்களில் சுற்றும் இந்த போட்டோ கார்ட் பொய்யானது ஆகும். இதை நம்பி இணையத்தில் சில நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.

முடிவு

காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பகிர்ந்த இந்த செய்தி பொய்யானது ஆகும்

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Did Mayor Priya talk against PM Modi? What did happen for real?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X