சென்னையில் ராமர் கோயிலை திமுக அரசு இடித்ததாக பாஜக நிர்வாகி பகிர்ந்த வீடியோ- Fact Check

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள ராமர் கோயிலை திமுக அரசு இடித்துவிட்டதாக பாஜகவினர் வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில் அது குறித்த உண்மை தன்மையை அலசுவோம்.

சமூக வலைதளங்களில் சாதி, மதம் சார்ந்த அவதூறான, தவறான பதிவுகளில் பகிரப்படுவதால் நாட்டின் அமைதியும், ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போலி செய்திகள், போலி வீடியோக்கள், போலி புகைப்படங்களை பகிர்வது, பழைய தகவல்களை புதியதைபோல் பதிவது, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் நடந்ததை தமிழ்நாடு என்று அவதூறு பரப்புவது வாடிக்கையாகிவிட்டது.

 தாம்பரம் ராமர் கோயில்

தாம்பரம் ராமர் கோயில்

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள ராமர் கோயிலை தமிழ்நாடு அரசு இடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோவுடன் தகவல் பகிரப்பட்டு வருகிறது. ரியல் பிக்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், "இன்றைய தாம்பரம் ராமர் கோவில் இடிப்பு திராவிட தி.மு.க. அவருக்கு வாக்களித்த இந்துக்களுக்கு" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

 வீடியோ வைரல்

வீடியோ வைரல்

அதேபோல் சுதாகர் கே என்ற புகைப்படம் பதிவிடாத ஒரு ட்விட்டர் கணக்கில், கோயில் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப்படும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பின்னால் ஒரு நபர் இடிங்க.. எல்லோரும் வேடிக்கை பாருங்க.. இந்துக்கள் யாருக்காவது சுறணை வருகிறதா? ஜெய் ஸ்ரீராம் என்று சத்தமிடுவதும் கேட்கிறது.

 இந்துக்களுக்கு எதிரான அரசு

இந்துக்களுக்கு எதிரான அரசு


இந்த வீடியோவுடன் "இன்று இந்துக்களுக்கு எதிரான திமுகவால் தாம்பரம் ராமர் கோயில் இடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு வாக்களித்த இந்துக்களுக்கு நன்றி." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இதனை லலிதா குமாரமங்கலம் என்பவர் ட்விட்டரில் ரீடுவீட் செய்து இருக்கிறார். அதில், "மேலும் ஒரு இந்து கோயில் அறிவாலயம் அரசாங்கத்தில் இடிக்கப்பட்டு உள்ளது.

 வினோஜ் பி செல்வம்

வினோஜ் பி செல்வம்

இதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்லப்போகிறார்கள் என்பதை கேட்க ஆர்வமாக உள்ளேன். தமிழ்நாட்டில் நம் கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் கூடிய விரைவில் நோட்டீஸ் வரும்." என்று கூறி இருக்கிறார். இதனை பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் ட்விட்டரில் ரீடுவீட் செய்துள்ளார்.

 உண்மை என்ன?

உண்மை என்ன?


இந்த வீடியோ மற்றும் தகவலின் உண்மை தன்மை குறித்து ஒன் இந்தியா தமிழ் குழு ஆராய்ந்தது. அப்போது இந்த வீடியோ கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தோம். தற்போது பாஜகவினர் பகிர்ந்து வரும் வீடியோ கடந்த ஜனவரி மாதமே ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த கோயில், அருகில் இருந்த தேவாலயத்தின் சுவர், தனிநபர் கட்டிடங்களுக்கு வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

 பாஜக, வலதுசாரிகள்

பாஜக, வலதுசாரிகள்

இதனை தொடர்ந்து கோயில், தேவாலய சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்ததாக காவல்துறை விளக்கமளித்து இருந்தது. எனவே பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் பழைய வீடியோவை தற்போது புதியதைபோல் சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராக பரப்பி வருவது தெளிவாகிறது.

Fact Check

வெளியான செய்தி

வெளியான செய்தி: சென்னை தாம்பரம் வரதராஜ புரத்தில் ராமர் கோயிலை திமுக அரசு இடித்து உள்ளது.

முடிவு

முடிவு: உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த ஜனவரி மாதம் கோயில் இடிக்கப்பட்ட விடியோ புதியது போல் பகிரப்படுகிறது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+