நீட் தேர்வு செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறதா? இணையத்தில் பரவும் வதந்தி.. தேர்வு முகமை விளக்கம்!
சென்னை: 2021ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த செய்தியை மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடக்குமா என்ற கேள்வி நிலவியது. திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் 3ம் தேதிதான் நீட் தேர்வுகள் நடக்க வேண்டும். ஆனால் இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

நிலை என்ன
பதிவு முறையும் மே 1ல் தொடங்க வேண்டியது. ஆனால் பதிவு முறையும் தொடங்கப்படாமல் இருந்தது. கடந்த வருடம் நீட் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 13, 2020ல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்று கேள்வி எழுந்துள்ளது.

பொய்
இந்த நிலையில் 2021ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த செய்தியை மறுத்துள்ளது. இணையத்தில் வெளியாகி பரவி வரும் செய்தி பொய்யானது.

உண்மை என்ன
நீட் தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழுதான் அறிக்கை அளிக்க உள்ளது.

வழக்கு
நீட் குறித்த ராஜன் குழுவிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக தொடுத்த வழக்கில், இதில் தமிழ்நாடு அரசின் முடிவை சென்னை ஹைகோர்ட் விமர்சனம் செய்தது. நீட் தேர்வுக்கு எதிராக முந்தைய அதிமுக அரசு தொடுத்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
2021ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
முடிவு
நீட் தேர்வு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இணையத்தில் பரவும் இந்த செய்தியை தேசியத் தேர்வு முகமை மறுத்துள்ளது.
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications