Gold rate today: தினமும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு.. சவரன் 92 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் ரூ.680 உயர்ந்த நிலையில் மாலை ரூ.600 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,280 உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையானது தினம் தினம் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதுவும் காலை மாலை என ஒரு நாளில் இருமுறை தங்கம் உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத புது உச்சமாக ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தினை தொட்டுள்ளது.

தங்கம் விலை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் போது தங்கத்தின் விலை சென்னையில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்ற வகையில் இருந்தது. ஆனால் அடுத்த 10 மாதங்களில் தங்கம் விலை சுமார் 35 ஆயிரம் அதிகரித்துள்ளது. வரலாற்றி இதுபோன்று ஒருமுறை கூட தங்கம் விலை உயர்ந்துள்ளது. தினம் தினம் அதிரடி காட்டும் தங்கம் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் தங்கத்தினை கனவில் தான் வாங்கு முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
நேற்று காலையில் தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. இதன்படி நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,340க்கும், சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலையில் ஒரு கிராமிற்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு சவரன் தங்கம் ரூ.680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில் மாலையிலும் தங்கம் விலை அதிரடி காட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 அதிகரித்துள்ளது. இதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.92,00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று மாலை ரூ.75 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (இன்று மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (இன்று காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (நேற்று மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (நேற்று காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (இன்று மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (இன்று மாலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (நேற்று பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (நேற்று காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600 (நேற்று)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (நேற்று மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.












Click it and Unblock the Notifications