Gold Price Today: ஒரே நாளில் 2 முறை சர்ப்ரைஸ் தந்த தங்கம் விலை.. தாறுமாறாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று காலை மாலை என இரு வேளைகளிலும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.960 குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து இருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மின்னல் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை இந்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ச்சியாக உயர்ந்தது. 1.30 ஆயிரம் என்ற அளவுக்கு வந்து தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.10 லட்சம் என்ற அளவுக்கு குறைந்து இருக்கிறது.

Gold Price Today Gold price drops twice in a single day price per sovereign down by Rs 1 280

குறைந்து வரும் தங்கம் விலை

கடந்த 8 மாதங்களாகவே தங்கம் விலை புதிய உச்சம் தொடாமல் இருந்து வருகிறது. கடந்த மாதம் மீண்டும் ரூ.1.24 லட்சம் என்று சென்றாலும் அதன் பிறகு மீண்டும் குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது ரூ.1.10 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை ரூ.1,11,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சர்ப்ரைஸ் தந்தது. அதாவது இன்று காலையில் தங்கம் விலை சரவனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,720-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

ஒரே நாளில் அடுத்தடுத்து சர்ப்ரைஸ்

காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.13,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,280 குறைந்து இருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் வெள்ளி விலை கடந்த இரு வாரங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலை மாற்றமின்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760 (இன்று மாலை)
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720 (இன்று காலை)
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040 (நேற்று)
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+