Gold Price Today: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,120 அதிகரித்தது.. நகை பிரியர்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று தாறுமாறாக கூடியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து இருந்தது. ஆனால் சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சரிந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. தற்போது தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

Gold Price Today gold price gold gold rate

தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் மேலும் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை ஆனது.

ஆனால் கடந்த 3 ஆம் தேதி ஷாக் கொடுத்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனையானது. தொடந்து 4 ஆம் தேதியும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் கடந்த 5 ஆம் தேதி சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 480 குறைந்தது.

மீண்டும் எகிறிய தங்கம் விலை

சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.14,130-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால் இன்றும் நம் ஊரில் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 இன்று

7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040 (நேற்று)
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+