Gold Rate: மளமளவென சரியும் தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 13) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமிற்கு ரூ. 14,060க்கும் 1 சவரன் ரூ. 1,12,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை ரூ. 1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்து 1 கிராம் ரூ. 265 க்கும், 1 கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. 1 லட்சத்திற்கு மேல் சென்ற தங்கம் விலையால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகியுள்ளது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 23 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,01,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 1-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.1,26,200- க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும், ஈரானின் கண்டிஷன்கள் நல்ல தொடக்கம் எனவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாக சரிந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை 15% வரை சரிந்தது. 100 டாலருக்கு கீழ் போனது. இதனால் டாலர் மதிப்பு சரிந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரேயடியாக உயர்ந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 2%க்கு மேல் அதிகரித்து, 4800 டாலரை தொட்டது. இந்தியாவிலும் அதுவே எதிரொலித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ 1,12,800-க்கும், கிராமுக்கு ரூ 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,110-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,65,000-க்கும் விற்பனையானது.
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 13) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமிற்கு ரூ. 14,060க்கும் 1 சவரன் ரூ. 1,12,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை ரூ. 1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்து 1 கிராம் ரூ. 265 க்கும், 1 கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400
-
ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்? -
உலகின் மொத்த தங்கத்தில் 40%ஐ இங்கிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இனி முடியாது! -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
தங்கம் விலை ஏறினாலும் லாபமா? அட்சய திருதியை “அந்த” ஜுவல்லரி திட்டத்தில் மறைந்த உண்மை என்ன? -
Gold Rate: தங்கம் விலையில் சரிவு! அட்சய திருதியை வேற வர போகுதே!












Click it and Unblock the Notifications