கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அண்ணன் எப்ப வருவார்.. திண்ணை எப்ப காலியாகும்?" என்ற கதையாக இருக்கிறது திமுக கூட்டணியின் தற்போதைய நிலைமை. தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டாலும், திமுக-வின் 'உடன் பிறப்புகள்' மட்டும் தான் தெருத்தெருவாக சைக்கிள் மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளோ, "எங்க தொகுதிக்கு மட்டும் நாங்க வருவோம்.. மத்த இடத்துக்கு நீங்க பாத்துக்கோங்க!" என எஸ்கேப் மோடுக்கு மாறியிருப்பதுதான் அறிவாலயத்தை அப்செட் ஆக்கியிருக்கிறது.

tamil nadu assembly elections 2026 Premalatha Vijayakanth DMK AIADMK

தூக்கத்தில் இருக்கும் காங்கிரஸ்!

"நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்க அடிச்சுக்கத் தெரிஞ்ச காங்கிரஸ்க்கு, களத்துல வேலை செய்யத் தெரியாதா?" என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 28 இடங்களைப் பிடிவாதமாகப் பேசி வாங்கிய சத்தியமூர்த்தி பவன் சிப்பாய்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் கொடியைத் தூக்குகிறார்கள்.

ஆனால், பக்கத்து தொகுதியில் இருக்கும் திமுக வேட்பாளருக்காக ஒரு 'துண்டுப் பிரசுரம்' கூட விநியோகிக்கக் காணோம். "ராகுல் காந்தி வரும்போது மட்டும் வந்து செல்பி எடுப்பார்கள், மற்ற நேரம் வீட்டுக்குள் ஏசி போட்டுத் தூங்குவார்கள்" என திமுக நிர்வாகிகள் ஓப்பனாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

சுயநலச் சுழலில் கூட்டணி கட்சிகள்!

விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் என மற்ற தோழமைக் கட்சிகளும் தங்கள் எல்லைக்கோட்டைத் தாண்டி வரத் தயங்குகிறார்கள். "எங்க வேட்பாளர் நிக்கிற இடத்துல ஓட்டு கேட்டா போதும்" என்கிற மனநிலை கூட்டணிக்குள் ஒருவித இறுக்கத்தை உருவாக்கியுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகளையும் ஜெயிக்க வேண்டும் என ஸ்டாலின் வியூகம் வகுத்து ஓடிக்கொண்டிருக்க, கூட்டணிக் கட்சிகளோ 'தனித்தீவு' கணக்காகச் செயல்படுவது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கலக்கும் பிரேமலதா.. ஆச்சரியப்படும் அறிவாலயம்!

இந்த மந்தமான சூழலில், 'அதிரடி காட்டி வருவது தேமுதிக தான். கூட்டணியில் 10 இடங்களை வாங்கினாலும், பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்ளும் பிரசாரம் திமுகவினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தன்னுடைய கட்சி வேட்பாளருக்காக மட்டுமல்லாமல், திமுக வேட்பாளர்கள் நிற்கும் இடங்களிலும் "ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்" எனப் பிரேமலதா முழங்குவது உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கேப்டன் மறைவுக்குப் பிறகு தேமுதிக-வின் ஒற்றை நம்பிக்கையாக உருவெடுத்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த், இப்போது கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி ஒரு தேர்ந்த அரசியல் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்த கையோடு, அம்பத்தூர் முதல் தெற்கத்தி சீமை வரை சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். "கேப்டன் வழியில்..." என அவர் பேசத் தொடங்கினாலே தொண்டர்கள் மத்தியில் விசில் பறக்கிறது. பிரேமலதாவின் கம்பீரமான குரலும், சுருக்கமான அதேசமயம் சுளீரென்ற பேச்சும் இந்த முறை தேர்தல் களத்தில் தேமுதிக-வின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது.

செல்லும் இடமெல்லாம் தேமுதிக தொண்டர்கள் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தையும் சேர்த்து ஏந்தி நிற்பது "இதுதான் உண்மையான கூட்டணி தர்மம்" எனப் பேச வைக்கிறது.

நிர்வாகிகளின் மைண்ட் வாய்ஸ்..

"மத்த கட்சிக்காரங்க வெறும் விசிட்டிங் கார்டு மாதிரி வந்துட்டுப் போறாங்க. ஆனா, தேமுதிக-வின் களப்பணி கேப்டன் காலத்து வேகத்தை நினைவூட்டுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் இதே வேகத்தைக் காட்டவில்லை என்றால், 'கூட்டணி பலம்' என்பது வெறும் காகிதத்தோடு முடிந்துவிடும்" என சீனியர் நிர்வாகிகள் எசப்பாட்டுப் பாடுகிறார்கள்.

சீட் வாங்கும் போது காட்டிய அந்த உரிமையை, வாக்கு சேகரிப்பதிலும் கூட்டணிக் கட்சிகள் காட்டுமா? இல்லை, "நாங்க ஜெயிச்சா போதும்" என ஒதுங்கிக் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+