Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.. குறிப்பாக, காலம் காலமாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில், இந்த முறை ஒரு பெரிய விரிசல் விழுமோ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள அதிரடி வியூகம் தான்.. அப்படியென்ன வியூகம்? இதனை திமுக அசால்ட்டாக முறியடிக்குமா? சிறுபான்மையினர் ஓட்டுகள் யாருக்கு? சுருக்கமாக இதை பற்றி இங்கே பார்க்கலாம்.

DMK TVK Vijay MK Stalin Minority Votes Tamil Nadu Election 2026 Tamil Nadu Assembly election 2026 Viral News Political Strategy 2026

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சுமார் 13 சதவீத சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளன.. இதில் கிறிஸ்தவர்கள் 6 சதவீதம், இஸ்லாமியர்கள் 7 சதவீதம் என பிரிந்து கிடக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இந்த ஓட்டுகள் மொத்தமாக திமுக பக்கம் சாய்ந்தன.. இதுதான் கடந்த தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.. ஆனால், இப்போது நிலைமை மாற தொடங்கிவிட்டது.

தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.. அதிலும் நேற்றைய தினம் ஒரு முதிய தம்பதி விஜய்யின் நெற்றியில் சிலுவை குறியிட்டு ஆசிர்வாதம் செய்த நிகழ்வு, அந்த சமூக மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

விஜய் வெறும் பெயரளவில் மட்டும் இல்லாமல், தனது வேட்பாளர் பட்டியலிலும் மிகத் தெளிவாக காய் நகர்த்தியுள்ளதாகவே தெரிகிறது.. தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள லிஸ்ட்டை பார்த்தால், 11 கிறிஸ்தவர்கள், 11 இஸ்லாமியர்கள் என மொத்தம் 22 சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு முக்கிய தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக திருச்சி கிழக்கு, ஆர்.கே. நகர், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் விஜய் களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் திமுகவின் ஓட்டுகளை பிரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

வழக்கமாக திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்குத்தான் இந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்.. ஆனால், விஜய் நேரடியாகவே சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவித்திருப்பது புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு

திமுக தரப்பில் இதுவரை குறைந்த அளவிலேயே முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. இது அந்த சமூக மக்களிடையே சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யின் இந்த வேகம் அவர்களுக்கு ஒரு மாற்றுப் பாதையாகத் தெரிகிறது..

"பாஜகவை எதிர்க்க நாங்கள் தான் சரியான ஆள்" என்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்தாலும், விஜய்யின் மீதான ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் எடுபடுகிறது.. ராமநாதபுரம், கிள்ளியூர் போன்ற பகுதிகளில் தவெக வேட்பாளர்கள் கொடுக்கும் டஃப் பைட், திமுகவின் வெற்றி வாய்ப்பை நிச்சயம் பாதிக்கும் என்பது ஒரு சாராரின் கருத்தாக உள்ளது.

ஆனால் திமுக அத்தனை எளிதாக தன்னுடைய பலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இதற்கு சில அடிப்படை காரணங்களும் இல்லாமல் இல்லை.

தமிழக அரசியலில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவின் இரும்புக்கோட்டையாகத்தான் இருந்து வருகிறது.. வெறும் தேர்தல் நேரத்து வாக்குறுதிகளுக்காக மட்டும் இந்த மக்கள் திமுகவை ஆதரிப்பதில்லை..

திமுக Vs தவெக

சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு அரணாக திமுக இருந்து வருவதால் ஏற்பட்ட ஆழமான பிணைப்பு இது.. வெறும் வேட்பாளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது கவர்ச்சிகரமான பிம்பத்தை உருவாக்குவதன் மூலமோ இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அவ்வளவு எளிதில் தகர்த்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்..

சிஏஏ எதிர்ப்பு முதல் வக்ப் வாரிய சட்டத் திருத்தம் வரை அனைத்து விவகாரங்களிலும் திமுக எடுத்துள்ள நேரடியான நிலைப்பாடு, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.. அது மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் அடிமட்டம் வரை வலுவாக இருப்பதால், அந்த வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்ய முதல்வர் ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்..

நிஜமான களப் போராட்டம்

அனைத்துக்கும் மேலாக, சிறுபான்மையின மக்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பவர்கள் கிடையாது.. அவர்கள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பையும், அரசியல் நிலைத்தன்மையையும் யோசித்தே வாக்களிப்பார்கள்.. சினிமாவில் இருக்கும் கவர்ச்சி அரசியலுக்கும், நிஜமான களப் போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்

தவெக தலைவர் விஜய் பல சிறுபான்மையின வேட்பாளர்களை நிறுத்தினாலும், ஒரு கட்சியின் கொள்கை மற்றும் அதன் கடந்த கால செயல்பாடுகளை வைத்தே மக்கள் எடை போடுவார்கள்.. அந்த வகையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கான பிரத்யேக கல்வி உதவித்தொகைகள் மற்றும் நல வாரியங்களை மேம்படுத்துதல் போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைக்கத் தயாராகி வருகிறது..

பயங்கர சவால்

இன்னும் ஓபனாக சொல்லப்போனால், சிறுபான்மையின மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் முதல் ஆளாகக் களத்தில் நின்று அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு பேரியக்கமாகத் திமுக இருப்பதால், அதன் வாக்கு வங்கியில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்துவது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும்..

மதவாத சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் ஒரே பலமான அரசியல் சக்தியாகத் திகழும் திமுகவின் கரம், சிறுபான்மையின மக்களின் ஆதரவோடு வரும் தேர்தலிலும் வலுவாகவே இருக்கும் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+