Gold Rate Today: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! ஒரு கிராம் 10 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 6) சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 80,040-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 10,005-க்கு விற்கப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.
செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,005-க்கும், சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 80,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120












Click it and Unblock the Notifications