Gold Rate Today: நகை பிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தங்கம் விலை.. அதிரடியாக சரிந்தது.. சவரன் 70,000 கீழ் சென்றது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்து நகை பிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. 74,500 வரை சென்ற ஒரு சவரன் தங்கம் விலை தற்போது 70 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த 12 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் மீண்டும் ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில் இன்று டபுள் மடங்காக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

gold price Chennai gold

தங்கம் விற்பனை

தங்கத்தை பொறுத்தவரை மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. என்னதான் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்களுக்கு குறைந்தபாடில்லை.

தங்கம் என்பது வெறும் அணிகலனாக மட்டும் இன்றி ஒருவரின் அந்தஸ்தை எடைபோடும் ஒன்றாக பார்க்கும் வழக்கம் மக்கள் மத்தியில் இருப்பது என்பதை மறுக்க முடியாது. பலரும் சிறந்த முதலீடாகவும் தங்கத்தை வாங்குகிறர்கள். இதனால், தங்கம் விற்பனை என்பது விலை உயர்ந்தாலும், அதிகமாகவே உள்ளது. தங்கம் விலையில் எற்படும் மாற்றம் வசதி படைத்தவர்கள் முதல், ஏழை எளிய மக்கள் வரை என அனைத்து தரப்பினர் மத்தியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே நாளில் மீண்டும் ஏறிய தங்கம்

இதனால், தங்கம் விலை எவ்வளவு கூடியுள்ளது, எவ்வளவு குறையும் என தினமும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கம் விலையை பொறுத்தவரை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்து வருகிறது. டிரம்ப் மேற்கொண்டு வரும் வரி விதிப்பு நடவடிக்கைகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருக்கிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உயர்வதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

விலை கடுமையாக உயர்ந்தாலும் இடையிடையே கொஞ்சம் சறுக்கலை கொடுத்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறது. அந்த வகையில் கடந்த 12 ஆம் தேதி தங்கம் விலை 'மளமள'வென சரிந்து, சவரன் ரூ. 70 ஆயித்திற்கு வந்தது. அன்றைய நாளில் இரண்டு முறை தங்கம் விலை சரிந்தது. பின்னர், கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை

கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவர ன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படும் நிலையில், விலை இன்று குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மேலும் அதிரடியாக குறைந்தது.

இன்றைய விலை என்ன?

இன்று ஒரே நாளில் சென்னையில் சவரனுக்கு ரூ.1560 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் 70 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.68,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.195 குறைந்து 8,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்:

15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880 (இன்று)
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440 (நேற்று)
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+