Gold Rate Today: மிக பெரிய அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்.. 6 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததும், அந்நாட்டு அரசு கடன் பத்திரங்களின் வருவாய் விகிதம் சரிவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இதே நிலை தான் இன்று இந்தியாவிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தியாவிலும் அது எதிரொலித்தது. இதனால் நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். போட்டி போட்டு கொண்டு நகைகளை வாங்கினர். ஆனால், நேற்றிரவு நிலைமை மாறிவிட்டது.

Gold Price Gold

தங்கம் விலை

நேற்றிரவு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.3% உயர்ந்து 4,156.52 டாலராக இருந்தது. முந்தைய நாள் வரை தங்கம் விலை பயங்கரமாக குறைந்த நிலையில், தற்போது தங்கம் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்திற்கான கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் 1.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,177.80 டாலராக இருந்தது.

அதேபோல அமெரிக்க டாலரின் மதிப்பும் 0.5% சரிந்தது. அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வருவாய் விகிதம் மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. இந்த மாற்றங்களால் மறுபுறம் தங்கம் விலை உயர ஆரம்பித்தது. அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உயர்ந்திருந்தாலும், இந்த மாதம் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

வல்லுநர்கள்

இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில்,"பணவீக்கம் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்க பொருளாதாரமும் நல்ல நிலையில் இல்லை. இந்த சூழலில் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிப்பது பொருளாதாரத்துக்கு பெரும் சுமையாக அமையும்" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்றே தெரிகிறது. இந்த மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு சுமார் 30% மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றால் தங்கம் விலை உயரும். இப்போதும் அதுவே நடக்கிறது.

தங்கம் விலை

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் இன்று 1,08,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 75 குறைந்து ரூ.13,515க்கு விற்பனையானது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

13-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,480

12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760

12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+