Gold Rate Today: ஒரேயடியாக சரிய போகுது தங்கம் விலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றமில்லாமல் இருக்கிறது. அதேநிலை தான் இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

தங்கத்தை பொறுத்தவரை அது சர்வதேச சந்தையில் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே இந்தியாவிலும் அதன் விலை இருக்கும். அமெரிக்காவில் தங்கம் விலை லேசாக உயர்ந்தாலும் கூட இந்தியாவிலும் சட்டென பறக்கும். இந்த சூழலில் தான் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டிலும் தள்ளாட ஆரம்பித்துள்ளதுள்ளது.

Gold Rate Today

என்ன காரணம்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் வெளியான டேட்டாவிலும் கூட எதிர்பார்த்ததை காட்டிலும் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதத்தை உயர்த்துமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் தெளிவான முடிவு இல்லாததே தங்கத்தின் விலையில் தள்ளாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படாவிட்டாலும் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயரும். பணவீக்க்ததை கட்டுப்படுத்த டிசம்பர் மாதம் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தியாக வேண்டும்.

பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. ஆனால், தங்கத்திலிருந்து வட்டி வருமானம் கிடைக்காது என்பதால் வட்டி விகிதங்கள் உயரும்போது முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் போக மாட்டார்கள். எனவே இந்த ஆண்டு வச்சி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டால் தங்கம் விலையும் படிப்படியாக குறையும்.

சர்வதேச மார்கெட்

இப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் விலை 0.1 சதவீதம் குறைந்து 4,165.12 டாலராக இருந்தது. கடந்த வார தங்கம் விலை உடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு.. அதேசமயம், டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் விலை 0.3 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,181.10 டாலராக உள்ளது.

இந்தியா

இந்தியாவை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. விலை குறைந்ததால் நகை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தொடக்கத்தில் 4 நாட்கள் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. இருப்பினும், நேற்றைய தினம் தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,535க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280க்கும் விற்பனை விற்பனையானது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

13-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,480

12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+