Gold Rate Today: 9 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை!
சென்னை: கடந்த 9 நாட்களாக தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ. 9,445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எண்ணமாக உள்ளது. ஆடி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், திருமண சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் ஆடி மாதத்திலேயே பலரும் அதிகளவில் தங்கம் வாங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். கடந்த மாதம் இறுதி வரை நிலையாக இருந்து வந்த தங்கம் விலை, ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே ஏற்றம் கண்டு வருகிறது.

உச்சத்தில் தங்கம் விலை
அதிலும் கடந்த 9 நாட்களாக வரலாற்றில் காணாத உச்சத்திற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரமாக இருந்த சூழலில், நேற்று ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விகிதமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்திலேயே இருக்கிறது.
9 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை
நேற்றைய நிலையை பொறுத்தவரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதனால் சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ.9,470க்கும், ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனையாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில், இன்றாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
குறைந்த தங்கம் விலை
இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ. 9,445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் இன்னும் குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360












Click it and Unblock the Notifications