Gold Rate Today: முதல் நாளே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. சென்னையில் தாறுமாறாக விலை குறைந்தது!
சென்னை: நமது நாட்டில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என இரண்டுமே மாறி மாறியே இருந்து வருகிறது. அதேநேரம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.9000க்கு மேலே நீடிக்கும் நிலையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை குறையும் என்றே மக்கள் நினைத்தனர். அதற்கேற்ப இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.9010க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் என இரண்டுமே மாறி மாறி இருந்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்த நிலையில், தங்கம் விலை குறைய அதுவே பிரதான காரணமாக இருக்கிறது. இப்போது ரஷ்யா உக்ரைன் மோதலைத் தவிர வேறு மேஜர் மோதல்கள் எதுவும் இல்லை. இதனால் தங்க முதலீடு குறைகிறது.

டிரம்ப்
மறுபுறம் அமெரிக்க டாலர் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது. அதிபர் டிரம்பின் பிக் பியூட்டிபுல் பில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதனால் டாலர் மதிப்பு சரிகிறது.. இதனால் தங்கம் விலை மெல்ல உயர ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் மேலும் உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த மாதம் இறுதியில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.71,320ஆக இருந்தது. அதன் பிறகு அது மெல்ல உயர்ந்தே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1000க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.72,160ஆக இருந்தது. ஜூலை 2ம் தேதி அது 72,520ஆகவும் ஜூலை 3ம் தேதி அதிகபட்சமாக 72,840 வரை போனது.
திடீரென குறைந்தது
பிறகு அது மெல்ல ரூ.72,480க்கு சனிக்கிழமை செட்டிலானது. கடந்த இரு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.440 குறைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை குறைய வேண்டும் என்றே மக்கள் கருதினர்.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.9010க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு மாற்றம் இல்லாமல் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications