Gold Rate Today: இன்று தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. அமெரிக்காவில் நடந்த மாற்றத்தால் ரேட் எகிறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் சற்று குறைந்த தங்கம் விலை மீண்டும் இப்போது உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.. இதற்கிடையே இன்றைய தினம் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தைத் தான் எப்போதும் முதல் சேமிப்பாகக் கருதி வாங்குவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு கொரோனா ஆரம்பித்து டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரி வரை பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

Gold Price Gold

தங்கம் விலை

கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிராம் தங்கம் விலையே ரூ.9000ஐ தாண்டியிருந்தது. இருப்பினும், இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சற்று குறைந்தே வந்தது. குறிப்பாக அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் சீரானது. சீனா மீதான டிரம்ப் விதித்த வரிகள் மொத்தமாக நீக்கப்பட்டது. பைடன் காலத்தில் இருந்த வரிகள் மட்டுமே தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் மோதலும் சில நாட்களில் முடிவுக்கு வந்தது

சில நாள் நீடித்த மகிழ்ச்சி

வணிக போர் சீரானதாலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாலும் தங்கம் விலை இந்தியாவில் கணிசமாகக் குறைந்தது. குறிப்பாகக் கடந்த மே 15ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.6,880 வரை போனது. அதாவது ஒரு கிராம் ரூ.8610க்கு விற்கப்பட்டது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்திருந்தனர்.

இந்தாண்டு திருமண சீசன் சீக்கிரம் தொடங்கவுள்ளது. அதற்கு இப்போது முதலே தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சில காலம் மட்டுமே நீடித்தது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

மீண்டும் ஷாக்

குறிப்பாக நேற்றைய தினம் அதிர்ச்சி தரும் வகையில் சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.220 உயர்ந்து ரூ.8930க்கு விற்கப்படுகிறது. அமெரிக்காவில் டாலர் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் சூழலில், இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8975க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.112க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800 (இன்று)

21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440 (நேற்று)
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+