Gold Rate Today: காலையில் ரூ.680.. இப்போ ரூ.600! ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை! சவரன் ரேட் இதுதான்
சென்னை: தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்று காலை கிராமிற்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மாலையில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்திருக்கிறது.
அமெரிக்க வர்த்தக போர் காரணமாக அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை என்று 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாத நிலைக்கு உயர்வதால் பலரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் புரட்டாசி மாதம் முடிவடைவதோடு, தீபாவளி பண்டிகையும் நெருங்கிவிட்டது. இதனால் மீண்டும் நகைக் கடைகளை தேடி மக்கள் செல்ல தொடங்கி இருக்கின்றனர். ஆனால் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத வகையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
நேற்று தங்கம் விலையை பொறுத்தவரை காலையில் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.11,260க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கும் விற்பனையாகி வந்தது. அதேபோல் வெள்ளி விலை ரூ.3 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.180க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.
பிற்பகலுக்கு பின் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.11,340க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் தங்கம் விலை குறைந்த போது மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அடுத்த 8 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்து ஷாக் கொடுத்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.தங்கம் கிராமிற்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.187க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்:
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications