தங்கம் வாங்க போறீங்களா? இதுதான் பெஸ்ட் வழி.. வல்லுனர்கள் சொல்லும் சூப்பர் முறை.. நிறைய வாங்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தை எளிதாக வாங்கும் முறையை பொருளாதார வல்லுனர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர். பலரும் தங்கம் சேமிக்க இந்த முறையை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,513 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,720 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,185 ஆகவும் உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் குறைந்தாலும் , பொதுவாக தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது.

gold rate

இப்படிப்பட்ட நேரத்தில் தங்கம் வாங்குவதற்கு எளிதான முறை ஒன்று இருக்கிறது. அதுதான் அரசு சார்பாக செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெறுவது. உங்களிடம் ஏற்கனவே உள்ள நகைகளை வைத்து கூட்டுறவு வங்கிகளில் 6 சதவிகிதம் வட்டிக்கு நகை கடன் பெறலாம்.

6-9 சதவிகிதம் வட்டிக்கு நகை கடன் பெறலாம். ஏற்கனவே உள்ள கொஞ்ச தங்கத்தை வைத்து எவ்வளவு குறைவான வட்டிக்கு கடன் பெற வேண்டுமோ பெறலாம். அரசு சார்பாக செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெறுவது மட்டுமே பாதுகாப்பான வழி.

பின்னர் அந்த பணத்தை வைத்து புதிதாக நகை வாங்க வேண்டும். பின்னர்.. வைத்த நகையை மாதம் மாதம் தொகை கட்டி கடைசியில் வருட கடைசிக்குள் திருப்ப வேண்டும். பின்னர் இதே முறையை மீண்டும் கடைபிடித்து மீண்டும் கையில் இருக்கும் புது நகையையும் சேர்த்து மொத்த நகையை அடகு வைத்து மீண்டும் கூடுதலாக புதிய நகை வாங்க முடியும். இப்படி நகையை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க முடியும். இது கேட்க கடினமானதாக, சிக்கலானதாக, சாத்தியமற்றதாக கூட தோன்றலாம்.

ஆனால் இது காம்பவுண்டிங் முறை ஆகும். அதாவது சிறுகச்சிறுக சேர்ப்பது. கேட்க சிறிய திட்டம் போல இருந்தாலும் நீண்ட காலத்திற்கு நல்ல பலனை தரக்கூடிய திட்டம் ஆகும்.

தங்கம் விலை மாற்றம்

தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக மிக மோசமாக உயர்ந்தது. கட்டுக்கடங்காத அளவிற்கு தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 1500 ஆயிரம் ரூபாய் தங்கம் விலை உயர்வு என்பது தேவையில்லாதது என்று கூறப்படுகிறது. இதனால் வருடம் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையலாம் என்கிறார்கள்.

அதாவது அதிகமாக உயர்ந்த விலை கோர்ஸ் கரெக்சன் ஆகும். அதாவது விலை சரியான நிலைக்கு பின்னோக்கி செல்லும். இதைத்தான் விலையில் செய்யப்படும் கோர்ஸ் கரெக்சன் என்பார்கள். அதன்படி தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 8700 கீழ் சரிய போவதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது இப்போது இருக்கும் விலையில் கிராமிற்கு 900 ரூபாய் குறைய போகிறது என்கிறார்கள். இதனால் 10 கிராம் தங்கம் 96000 ரூபாயில் இருந்து 87000 ஆக கிட்டதட்ட 9000 ரூபாய் குறைய போகிறது என்று கணித்துள்ளனர். அடுத்த கட்டமாக தங்கம் விலை சில நாட்களில் 94000 ரூபாயை அடையும்.

அதை தொடர்ந்து 92 ஆயிரம் ரூபாயை அடையும். அதன்பின் தங்கத்தின் விலை ஒரு சில வாரங்களில் 87000 ரூபாயை அடையும். பின்னர் 86000 ரூபாய்க்கு செல்லும் என்று கணித்துள்ளனர்.

சரியும்

தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,119.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3179 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.

1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3179 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 23,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது.

இந்த மாதம் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காலாண்டில் வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தகப் போர், நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையற்ற பணவீக்கப் போக்குகள் ஆகியவற்றால் வரி விகிதத்தை குறைக்க மாட்டோம் என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுவும் கூட தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+