Gold Rate Today: இன்று தங்கம் விலை அதிரடி சரிவு.. ஒரே நாளில் 640 குறைந்து ரூ.65,760க்கு விற்பனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 1,440 உயர்ந்தது. காலை ஒரு முறை, மதியம் ஒரு முறை என 2 முறை தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில், இன்று சவரன் 67 ஆயிரத்தை கடக்குமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.65,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரியளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம்.

Gold price Gold

தங்கம் விலை கடும் உயர்வு

இந்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி முதல் தங்கம் விலை கடுமையாக உயரத் தொடங்கியது. ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.64,480 என்றும், 20 ஆம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

அதன் பிறகு, ஓரிரு நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64,600 ஆக உயர்ந்தது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது.

பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை மேலும் ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர் உயர்வில் தங்கம்

மார்ச் 4 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 5 சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை மார்ச் 13 ஆம் தேதி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதற்கு முந்தைய நாளில் 22 காரட் தங்கம் மார்ச் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு சவரன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், கிராமுக்கு ரூ.55 என சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120 ஆகவும் ஒரு சவரன் ரூ.64,960 ஆகவும் உயர்ந்தது.

ஒரே நாளில் 2 முறை

நேற்று (மார்ச் 14) காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மதியம் மீண்டும் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போது இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது.

இதன்மூலம் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 1,440 உயர்ந்தது. இந்நிலையில், இன்று சவரன் 67 ஆயிரத்தை கடக்குமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.65,760க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.8,220க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

15.03.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.65,760

14.03.2025 (பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025 (நேற்று காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+