Gold rate today: வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் கலக்கம்
சென்னை: சென்னையில் தங்கம் விலை (Gold rate today) மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ. 75 ஆயிரத்து கடந்துவிட்டது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியா மீது அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள சூழலில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தங்கம் விலை நடப்பு 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்த நிலையில், அடுத்த 7 மாதங்களில் சுமார் 18 ஆயிரம் அதிகரித்து 75 ஆயிரத்தை தொட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.73 ஆயிரமாக இருந்த நிலையில், அதற்கு மறுநாள் ரூ.74 ஆயிரமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 370-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்ச விலையாக இருந்து வருகிறது. நேற்றும் அதே விலையை தங்கம் தொட்டு இருந்தது. இது நகை பிரியர்களை கலங்க வைத்த நிலையில், தங்கம் விலையானது இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய ரேட் என்ன?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,400-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் இதுதான் புதிய உச்சம் ஆகும். இந்தியா மீது அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள சூழலில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240












Click it and Unblock the Notifications