அமெரிக்காவின் 'தங்க' பிளான்.. உலகப் பொருளாதாரத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்.. SBI தரும் வார்னிங்!
சென்னை: அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. "அமெரிக்கா தன்னிடம் இருக்கும் மலை போன்ற தங்க இருப்பின் மதிப்பை மாற்றி எழுதப் போகிறது (Revaluation)" என்பதுதான் அந்த ஹாட் டாபிக். ஒருபுறம் தங்கம் விலை தினமும் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்க, மறுபுறம் அமெரிக்கா தனது பட்ஜெட் ஓட்டையை அடைக்க இந்த விலையேற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தப் போகிறது என்று பேச்சுகள் எழுந்தன.
அப்படி நிஜமாகவே நடந்தால் என்னவாகும்? உங்கள் கையில் இருக்கும் தங்கத்தின் நிலை என்ன? எஸ்பிஐ (SBI Research) ஆய்வு அறிக்கை சொல்லும் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

அது என்ன 'தங்க மதிப்பு மறுசீரமைப்பு'? (Gold Reserve Revaluation)
ரொம்ப சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் தாத்தா காலத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு நிலம் இப்போது 1 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம். ஆனால் உங்கள் கணக்குப் புத்தகத்தில் இன்னும் பழைய 100 ரூபாய் என்றே குறிப்பிட்டால் எப்படி இருக்கும்? அந்தப் பழைய விலையை மாற்றி, இன்றைய மார்க்கெட் விலைக்கு கணக்குக் காட்டுவதுதான் 'Revaluation'.
மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை பழைய விலையில் கணக்குக் காட்டாமல், இன்றைய சந்தை விலைக்கு மாற்றும்போது அவற்றின் சொத்து மதிப்பு பல மடங்கு உயரும். இந்த லாபத்தை வைத்து அரசாங்கத்தின் கடன்களை அடைக்கவோ அல்லது நஷ்டத்தைச் சரிசெய்யவோ முடியும்.
அமெரிக்காவின் 'பழைய' கணக்கு!
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்காதான் (சுமார் 261.5 மில்லியன் அவுன்ஸ்). ஆனால் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், அமெரிக்கா தனது கணக்குப் புத்தகத்தில் இன்னும் 1973-ம் ஆண்டு விலையான 42.22 டாலர் என்ற விலையிலேயே தங்கத்தைப் பதிந்து வைத்துள்ளது.
ஆனால் இன்றைய மார்க்கெட் விலையோ 2,500 டாலரைத் தாண்டி, 5,000 டாலரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது அமெரிக்கா இந்த விலையை மாற்றினால் என்ன நடக்கும்?
சொத்து மதிப்பு எகிறும்: அமெரிக்காவின் தங்கச் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலரிலிருந்து 1.3 ட்ரில்லியன் டாலராக உயரும்.
பட்ஜெட் ஓட்டை அடையும்: அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் சுமார் 70 சதவீதத்தை இந்த ஒரே ஒரு 'பென்சில் மாற்றத்தில்' துடைத்து எறிந்துவிடலாம்.
பிட்காயின் கனவு: கடந்த 2025 நவம்பரில், செனட்டர் சிந்தியா லும்மிஸ் ஒரு அதிரடி யோசனையைச் சொன்னார். தங்கம் மதிப்பை உயர்த்தி, அந்த லாபத்தில் 10 லட்சம் பிட்காயின்களை வாங்கலாம் என்பதுதான் அது!
தங்கம் விலை இன்னும் ஏறுமா?
கண்டிப்பாக! அமெரிக்கா இப்படி ஒரு முடிவை எடுத்தால், அது உலக அளவில் தங்கத்திற்கான டிமாண்டை வேற லெவலுக்குக் கொண்டு செல்லும்.
காகிதப் பணத்தின் மீதான பயம்: அமெரிக்காவே தங்கத்தைத்தான் நம்புகிறது என்ற செய்தி பரவினால், மக்கள் காகிதப் பணத்தை (Fiat Currency) விட தங்கத்தையே பாதுகாப்பாகக் கருதுவார்கள்.
மற்ற நாடுகளின் போட்டி: அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா, சீனா போன்ற நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கிச் சேர்க்க ஆரம்பிக்கும்.
முதலீட்டாளர்களின் தஞ்சம்: பங்குச்சந்தை சரிந்தால் தங்கம் ஏறும் என்பது விதி. இதுபோன்ற குழப்பமான சூழலில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தை நோக்கித் தஞ்சமடைவார்கள்.
இதில் இருக்கும் ஆபத்துகள் என்ன?
நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல, இதில் சில சிக்கல்களும் உண்டு:
பணவீக்கம் (Inflation): கணக்குக் காட்டாமல் புதிதாகப் பணத்தை அச்சிடுவதற்குச் சமமான விளைவை இது ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
ஜிடிபி சிக்கல்: சொத்து மதிப்பு கூடினாலும், அதைச் சமன் செய்ய பொறுப்புகளும் (Liabilities) கூடும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கலாம்.
தங்கம் வைத்திருக்கும் நாடுகள் (சதவீத கணக்கில்):
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் மொத்த இருப்பில் 80 சதவீதத்திற்கும் மேலாகத் தங்கமாகவே வைத்துள்ளன. நம் நாட்டைப் பொறுத்தவரை (இந்தியா), 2009-ல் 6.9 சதவீதமாக இருந்த தங்க இருப்பு, தற்போது 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாமும் மெல்ல மெல்ல தங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.
சுருக்கமாகச் சொன்னால்: அமெரிக்காவின் இந்த மூவ் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சூறாவளியைக் கிளப்பலாம். அது நடந்தால், தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அதுதான் உலகின் உண்மையான 'பவர்' என்பதை உலகம் மீண்டும் உணரும்!
-
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம் -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
மாதம் ₹10,000 வாடகை கொடுக்கிறீங்களா? இதே பணத்தில் வீடு வாங்கிய ரகசியம்.. 2026ல் லாபம் தரும் கணக்கு -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications