தங்கம் விலை காலையில் உயர்ந்து! மாலையில் சவரனுக்கு ரூ 1120 குறைவு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அக்டோபர் 24ம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்தது. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.92,320 பாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 குறைந்து, ஒரு சவரன் ரூ 92,200-க்கு விற்பனையாகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைந்தது, டாலர் வலுவடைந்ததுள்ளது. மேலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி அமெரிக்கா நகருவது தான் தங்கம் விலை அதிரடியாக குறைய காரணம் ஆகும். அதுமட்டுமின்றி டாலர் மதிப்பு பழைய படி வலுவடைந்து வருவதும் தங்கம் விலை குறைய காரணமாக இருக்கிறது. மேலும் பங்கு சந்தையிலும், டாலரிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கிவிட்டதால் தங்கம் விலை குறைந்து வருகிறது. முன்னதாக அக்டோபர் 17ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஒரு கிராம் 12 200 என்ற உச்சத்தை அடைந்தது. அக்டோபர் 19ம் தேதி அன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..ஆனால் அடுத்த நாளே தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் வரை குறைந்தது. இதனால் ஒரு சவரன் அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி 96000 ஆக இருந்தது. அக்டோபர் 19ம் தேதி அன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..

ஆனால் அக்டோபர் 20ம் தேதியான தீபாவளி அன்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்ததால், ஒரு சவரன் 95 ஆயிரத்து 360 ஆக குறைந்தது. தீபாவளிக்கு மறுநாள் மட்டும் சற்று அதிகமாகி பழைய படி 96000 ஆக மாறியது. ஆனால் அக்டோபர் 22ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் மிகப்பெரிய அளவுக்கு சரிந்தது. 3680 ரூபாய் ஒரு நாளில் குறைந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் அக்டோபர் 23ம் தேதியான நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கும், விற்பனை ஆனது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் காரணமாக விலை கடும் சரிவை சந்தித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் கடந்த அக்டோபர் 15ம் தேதியில் இருந்தே அதிரடியாக குறைந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,74,000-க்கும் விற்பனையானது. ஆனால் அக்டோபர் 24ம் தேதி இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்தது. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.92,320 பாய்க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11, 540 க்கு விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை வழக்கம் போல் சரிந்தது. ஒரு கிலோ ரூ. 171,000 ஆக சரிந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி சென்னையில் 171 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ 1120 குறைந்து ஒரு சவரன் ரூ 92200-க்கும் கிராமுக்கு ரூ 140 குறைந்து ஒரு கிராம் ரூ 11400-க்கு விற்பனையாகிறது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications