கோடைகாலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் 6 முக்கிய உணவுகள்!
சென்னை: அன்றாடம் நாம் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்வது அவசியம் ஆகும். அதே சமயத்தில் குறைந்த கலோரி உள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதால், உடல் எடையையும் குறைக்க பயனுள்ளதாகவும் இருக்கு வேண்டும். அதிகம் நீரேற்றம் உள்ள காய்கறிகள் உடல் எடை குறைப்பதற்கும் உடல் ஆரோக்கியம் மேம்பட இன்றியமையாதது, மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தங்கள் உணவுகளில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டு, கொழுப்பு, இறைச்சி, மற்றும் சக்கரை நிறைந்த உணவு, கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
கோடை வெயிலின் காரணமாக உடலில் வியர்வை, நீர் இழப்பு ஏற்படுவதால், உடல் சோர்வாக இருக்கும். நீர் இழப்பு வியர்வையைத் தவிர்க்க, சிறந்த ஆரோக்கியமான உணவுப் பொருட்களைக் உட்கொண்டு உடலைப் பராமரிப்பது அவசியம். குறைந்த கலோரி உணவுகள் உட்கொண்டால், உடல் எடை குறையும், அரோக்கியமாகவும் இருக்க முடியும். உடலில் நீர் இழப்பு ஏற்படாமலும், அதே சமயம் உடல் எடை குறைக்க உதவும் குறைந்த கலோரி உணவு வகைகளை பற்றி பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய், இதில் அதிக அளவு நீர்சத்து இருப்பதால் கோடை வெயிலுக்கு உடலில் நீர்சத்தை தக்க வைக்க உதவியை இருக்கும். மிக குறைந்த கலோரி இருப்பதால், தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கவும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும். அடிக்கடி சாப்பிட்டுவந்தால் செரிமான மண்டலத்திற்கு மிகவும் ஆரோக்கியம் தரும். வைட்டமின் கே, சி, பொட்டாசியம் இருப்பதால், தசை மற்றும் எலும்புகள் போன்ற இணைப்பு தசைகளை பராமரிக்க உதவுகிறது. கோடைகாலத்தில் தினமும், வெள்ளரிக்காயை பச்சையாகவோ, சாலட், அல்லது ஜூஸ்ஸாக எடுத்து கொள்ளலாம்.

பீட்ரூட்
எல்லா சீசன்லேயும் மலிவாக கிடைக்கக்கூடிய காய் இந்த பீட்ரூட். மிக குறைந்த அளவில் கலோரி, அதிக அளவில் நார்சத்து இதேவையற்ற கொழுப்புகளை கரைத்து, எடை குறைப்பதற்கு இது ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள பீட்டாலைன் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செய்யப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றி, உடலில் தேவையில்லாத நச்சுகளை (toxins) சிறுநீர், மலம் வழியே வெளியேற்றிவிடும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், நோய்கள் உடலில் வராமல் பாதுகாத்துக்கொள்கிறது. வாரம் 2 முறையாவது உணவில் அல்லது மத்திய வேளையில் ஜூஸ்ஸாக குடிக்கலாம். பீட்ரூட் உணவில் சேர்த்துகொண்டுவந்தால் இரத்த சோகை (Anemic) வராமல் தடுத்து, இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரைட், ஸ்ங்க், இரும்பு போன்ற சத்துகள், அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கல்லிரலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்ய உதவுகிறது.

தக்காளி ஓர் மல்டி வைட்டமின் உணவு
தக்காளியில் வைட்டமின் சி, ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7, ஆகிய ஊட்டச்சத்துக்களும், தாதுக்கள் நிறைந்துள்ளது. தக்காளி, அதிக நீரேற்றம் உள்ள பழம் என்பதால் கோடைகாலத்தில் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதை தடுக்கவும், மேலும் மிக குறைந்த கலோரியே இருப்பதால் உடல் எடை இழப்பிற்கு ஏற்ற பழம். அதுமட்டுமின்றி சரும பராமரிப்பு, உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க, மாரடைப்பு, போன்ற பல நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

வெங்காயம்
நாம் அன்றாடம் சமையலில் தவறாமல் பயன்படுத்தக்கூடியது இந்த வெங்காயம். பல்லாரி வெங்காயம், வெள்ளை வெங்காயம், சாம்பார் வெங்காயம் என பல வகைகள் உண்டு. மற்ற வெங்காயத்தை பார்க்கிலும் சின்ன வெங்காயத்தில் தான் அதிக மருத்துவகுணம் உள்ளது. வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6, போலிக் அமிலம் (folic acid), நார்சத்து அடங்கியிருக்கிறது. வெங்காயத்தில் சோடியம், மற்றும் கலோரி மிக குறைந்த அளவே இருப்பதால், கெட்ட கொழுப்புகளை கரைய செய்து, எடை அதிகரிப்பதை தடுக்கும். எனவே வெறும் வயிற்றில் அல்லது தினமும் தகுந்த நேரத்தில் வெங்காய ஜூஸ் குடித்துவரலாம். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இரைப்பை புண் (Ulcer), ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், இதய தமனிகளில் அடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். வயிறு உப்பிசம் பிரச்சனை உள்ளவர்கள், மத்திய உணவில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவந்தால் இப்பிரச்சனை தீரும்.

காளான்
காளான் மற்ற உணவுகளை காட்டிலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்து, மினரல்ஸ், ஜிங்க், பொட்டாசியம் வைட்டமின் கே சி டி அதிகமாக காணப்படுகிறது. வைட்டமின் டி அதிக அளவும், மிக குறைந்த கலோரிகள், புரதசத்து, மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுப்படுத்த, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், காளானை உணவில் சேர்த்துக்கொள்ளாமல். இதில் உள்ள பொட்டாசியம் இரத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கும், வாரத்தில் 2-3 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பும், கார்போஹைட்ரெட் இல்லை, மேலும் அதிக அளவில் இன்சுலின் சுரக்க செய்கிறது, எனவே சக்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

குடைமிளகாய்
உடல் எடையை குறைக்கக்கூடிய காய்கறிகளில் குடைமிளகை மிக முக்கிய பங்கு வகுக்கிறது. மிக குறைந்த கலோரி இருப்பதால், உடலில் வளர்சிதை மாற்றத்தை (metabolism) தடுக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்சத்து உடல் எடையை விரைவில் குறைக்க உதவிசெய்கின்றது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வை கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, புற்றுநோய் செல்களை அழித்திடும், இதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிவப்பு நிற குடைமிளகை சிறந்தது. குறைந்த கலோரி உள்ள மற்ற காய்கறிகள் கேரட், செலரி, காளிபிளவர், ப்ரோக்கோலி, முள்ளங்கி, கீரை, முட்டைகோஸ், ஆகிய காய்கறிகள் உடல் எடை இழக்க பெரிதும் உதவுகின்றன












Click it and Unblock the Notifications