ஊறவெச்ச வெந்தயம்.. முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால்.. உடலில் நடக்கும் மாற்றம் என்ன தெரியுமா? வாவ்
சென்னை: சமையலில் தாளிப்புக்கு மட்டுமே வெந்தயம் பயன்படுத்தாமல், ஊற வைத்து சாப்பிடும்போது, வெந்தயத்தின் பயன்கள் என்னென்ன தெரியுமா? முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? எப்படி முறைப்படி முளைகட்டுவது?
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றன.. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து என பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.. குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயம், சிறுநீரை பெருக்கக்கூடியது. வெந்தய விதைகள், ஆல்கலாய்டுகள், ஜீரணத்தை தந்து, பசியை அதிகப்படுத்தக்கூடியவை..

நரம்புகள் பலவீனமாக உள்ளவர்களுக்கு இந்த வெந்தய விதைகளே போதும்.. எனினும், வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்துவதால், முழு பலனையும் பெறலாம். இதற்கு குறைந்தது 10 மணி நேரமாவது வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும். பிறகு, அதன் தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் மீண்டும் கட்டிவைத்து, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து, அடிக்கடி தண்ணீரை தெளித்து வரவேண்டும். இப்போது முளை கட்டிய வெந்தயம் கிடைத்துவிடும்...
வெந்தயம்: இப்படி முளைகட்டினால், அந்த வெந்தயத்தின் கசப்பு தன்மை முற்றிலும் நீங்கி தித்திப்பு சுவை வந்துவிடும். ஊற வைத்த வெந்தய தண்ணீரைகூட அப்படியே குடிக்கலாம். அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
முளைகட்டிய விதைகளில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், உடல் எடையை குறைக்க, இந்த விதைகள் பயன்பெறுகின்றன. சாலட்களில், சூப்களில் முளைகட்டிய வெந்தய விதைகளை தூவலாம்.
குளிர்ச்சி நிறைந்த இந்த விதையை, மாதவிடாய் பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம். வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவைகள் நீங்குவதுடன், உள்ளுறுப்புகளுக்கும் பலம் தரும். தோலில் சுருக்கம் ஏற்படாமலும், பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளை நீக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.. தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால், இந்த வெந்தயத்தை அரைத்து பூசி, குளித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
தாய்மார்கள்: இந்த விதையில் காலக்டோமன் என்ற பொருள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து, தேவையில்லாத கொழுப்புகள், சர்க்கரையை கரைக்க உதவுகிறது.. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த முளைகட்டிய வெந்தயம், கட்டாயம் தர வேண்டும். தாய்ப்பாலை பெருக்கக்கூடியது என்பதால், டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு வரலாம்.
அதேபோல, அலர்ஜி உள்ளவர்கள், நாட்பட்ட மருந்து சாப்பிடுபவர்கள், பலவீனமான சிறுநீரகங்களை கொண்டவர்கள், மூலநோய் பாதிப்புள்ளவர்கள், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட வேண்டும.
ஊற வைத்த வெந்தயம்: முளை கட்ட முடியாவிட்டாலும், இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம. இது செரிமானத்திற்கு உதவும்.. அமிலத்தன்மை, வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.. கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.. உடல் எடையால் அவதிப்படுபவர்கள், ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீருடன் குடிது வந்தால் மாற்றம் தென்படும்.
வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் உள்ள ஆல்காலய்டுகள் மாதவிடாய் வலியை குறைக்கும் என்பது பல ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications